RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்  பணவியல் கொள்கை குழு (MPC) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று 2024ஆம் ஆண்டுக்கான நிதிக் கொள்கைக் கூட்டத்தின் முடிவை அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணவியல் கொள்கை குழு மறுஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்களை அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) ஆளுநர் சக்திகாந்த தாஸ், நாணயக் கொள்கைக் குழுவின் ஆறு உறுப்பினர்களில் நான்கு பேர், கொள்கை விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறினார். 


உலக அளவில் உள்ள நிச்சயமற்ற நிலையில் பணவீக்கத்தை நிலையான அளவில் அதாவது நான்கு சதவீதத்திற்கு கொண்டு வந்து பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் கொள்கை விகிதம் அப்படியே வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


கடன் EMI -இல் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?


ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மாற்றாமல் அப்படியே தொடர முடிவெடுத்துள்ள நிலையில், வங்கியில் நாம் வாங்கியுள்ள கடன்களின் வட்டி, EMI குறையுமா அல்லது கூடுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். RBI ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளதால், இப்போதைக்கு வீட்டுக் கடன் அல்லது பிற கடன்களின் EMI இல் அதிகரிப்பு இருக்காது. 


Repo Rate: ரெப்போ விகிதம் என்றால் என்ன?


ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ஆகும். ரெப்போ விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் நம் அனைவரையும் பாதிக்கும். வீடு அல்லது கார் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு ரெப்போ விகிதம் EMI-யில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ரெப்போ விகிதம் வங்கிகள் கடன் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களிடமிருந்து எவ்வளவு வட்டி வசூலிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது.


பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் தாக்கம் என்ன?


ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தாலோ அல்லது அதிகரித்தாலோ அதன் தாக்கம் வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தின் மீது இருக்கும். ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், அதன் பிறகு, வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டியையும் வங்கிகள் உயர்த்துகின்றன. அதாவது, ரெப்போ விகிதம் அதிகரித்தால் வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்கின்றன. அதேபோல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தால் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோ


GDP வளர்ச்சி விகிதம் மதிப்பீடுகள் 7.2 சதவீதமாக இருக்கும்


2024-25 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக மத்திய வங்கி பராமரித்து வருவதாக தெரிவித்த சக்திகாந்த தாஸ், நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கூறினார். 


அந்நிய செலாவணி கையிருப்பு 675 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சாதனை அளவில் உள்ளது: சக்திகாந்த தாஸ்


இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2-ம் தேதி 675 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சாதனை அளவை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பெருமையுடன் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் இந்திய ரூபாயின் மதிப்பு வரம்புக்குட்பட்ட அளவிலேயே இருக்கும் என கூறிய ரிசர்வ் வங்கி கவர்னர், நடப்பு நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பெரும்பாலும் நிர்வாகத்தின் எல்லைக்குள் இருக்கும் என தெரிவித்தார். 


மேலும் படிக்க | EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ