RBI Action On Kotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கிக்கு, இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒழுங்குமுறை நடவடிக்கை குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், கோடக் மஹிந்திரா வங்கி உடனடியாக ஆன்லைன் வழியான அதன் உறுப்பினர் சேர்க்கை, மொபைல் பேங்கிங், கிரெடிட் கார்டு விநியோகம் ஆகிய சேவையை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வங்கியின் நேரடியான உறுப்பினர் சேர்க்கையை நடத்த வங்கிக்கு எவ்வித தடையும் இல்லை. அதேபோல் மற்ற சேவைகளையும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்க எவ்வித தடையும் இல்லை. ஆன்லைன் வழியிலான புதிய வாடிக்கையாளர்களுக்கே இந்த நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆர்பிஐ விளக்கம்


ஆர்பிஐ இன்று வெளியிட்ட அறிவிப்பில், "1949ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 35ஏ பிரிவின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் (இனி 'வங்கி' என்று குறிப்பிடப்படுகிறது) உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அதன் ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது மற்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குதல் ஆகியவற்றை தடுக்கிறது.  இருப்பினும், கோடக் மஹிந்திரா வங்கி அதன் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் உட்பட அதன் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்கும்" என குறிப்பிட்டுள்ளது. 


மேலும் படிக்க | PF கணக்கில் வட்டித்தொகை வந்துவிட்டதா? 4 வழிகளில் சுலபமாக செக் செய்யலாம்


இந்தியாவில் முதல்முறை...


கோடக் மஹிந்திரா வங்கி 1985ஆம் ஆண்டு உதய் கோடக் என்பவரால் முதன்முதலில், கோடக் கேப்பிடல் மேனேஜ்மெண்ட் பைனான்ஸ் என்ற முதலீடு மற்றும் நிதி நிறுவனமாக தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாண்டு  ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரின் தந்தை ஹரிஷ் மஹிந்திரா ஆகியோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில், நிறுவனத்தின் பெயர் கோடக் மஹிந்திரா பைனான்ஸ் என மாற்றப்பட்டது. 


இதை தொடர்ந்து, கடந்த 2003ஆம் ஆண்டு கோடக் மஹிந்திரா பைனான்ஸ் லிமிடெட் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிக்கான உரிமத்தை பெற்றது. இதன்மூலம், இந்தியாவில் வங்கியில்லாத பைனான்ஸ் கம்பெனி ஒன்று வங்கியாக மாறியது இதுவே முதல்முறையாகும். மூச்சுவல் ஃபண்ட்ஸ், முதலீடு, காப்பீடு உள்ளிட்ட பல சேவைகளை இந்த வங்கி வழங்கி வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த வங்கிக்கு நாடு முழுவதும் மொத்தம் 4.8 கோடி வாடிக்கையாளர்களும், 1,869 கிளைகளும், 3,239 ஏடிஎம் மையங்களும் உள்ளன. 


காரணம் என்ன?


தற்போது ஆர்பிஐ, கோடக் மஹிந்திரா மீதான நடவடிக்கைக்கு முக்கிய காரணங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம். ஆர்பிஐயின் ஆய்வின்போது, கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கோடக் மஹிந்திரா வங்கியில் காணப்பட்ட முக்கிய குறைப்பாடு மற்றும் இணக்கமின்மை ஆகியவை காணப்பட்டது. வங்கி இந்த பிரச்னைகளை நீண்ட காலமாக, விரிவான முறையில் தீர்க்கவில்லை என்றும் ஆர்பிஐ கூறுகிறது. 


தகவல் தொழில்நுட்ப மேலாண்மை, பயனர் அணுகல் மேலாண்மை, விற்பனையாளர் இடர் மேலாண்மை, இணைப்பு மற்றும் மாற்றம் மேலாண்மை, தரவு பாதுகாப்பு மற்றும் தரவு கசிவு தடுப்பு வியூகம், வணிக தொடர்ச்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் கோடக் மஹிந்திராவிடம் பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளது. 


தொடர்ந்து, "இந்திய ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து, கோடக் மஹிந்திரா வங்கியின் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரச்னைகளை பலமாக்குவது குறித்து உயர் மட்ட தொடர்பில் இருந்தோம். ஆனால், அதன் வெளிப்பாடு என்பது திருப்திகரமாக இல்லை. இருப்பினும் தொடர்ந்து அந்த வங்கியின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால் அதன் ஐடி அமைப்புகளில் கூடுதல் சுமைகள் ஏற்படும் என்பதையும் புரிந்துகொண்டோம்" என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ