மேற்கு வங்கத்தில் 8 மூட்டை வெங்காயத்தை திருடிய கள்வர்கள்!
இந்தியாவில் தற்போது வெங்காயத்தின் விலை வானை நோக்கி சென்றுள்ளது. இது விவசாயிகளின் கண்ணீரை அகற்றியுள்ள போதிலும், மேல்தட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது வெங்காயத்தின் விலை வானை நோக்கி சென்றுள்ளது. இது விவசாயிகளின் கண்ணீரை அகற்றியுள்ள போதிலும், மேல்தட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்தியுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், தற்போது கொள்ளையர்கள் வெங்காயத்தை கொள்ளையடிக்க துவங்கும் அளவிற்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூரில் தான் இதுபோன்ற ஒரு வழக்கு வெளிவந்துள்ளது. தங்கள், வைரம் என கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள் தற்போது ஒரு கடையின் பூட்டை உடைத்து 50,000 ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த செய்தி அப்பகுதியில் தீ போல பரவி வருகிறது.
கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் ஹால்டியாவில் அமைந்துள்ள பசுதேவ்பூரின் ஷா பஜாரில் உள்ள அக்ஷய் தாஸின் கடையில் இருந்து கிட்டத்தட்ட 50,000 ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் திங்கள்கிழமை இரவு திருடப்பட்டதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் செய்தி நாடெங்கிலும் பரவியுள்ள நிலையில், சாதாரன மக்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது, 90 முதல் 100 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்குக் காரணம், வெங்காயம் இறக்குமதி தடைப் பட்டிருப்பதால் என கூறப்படுகிறது, இதனிடையே விலை அதிகரித்து வரும் வெங்காயங்களை திருடி விற்க கள்வர்கள் படையெடுத்துள்ளனர்.
அதிகரித்து வரும் வெங்காய திருட்டு உயர் தட்டு மக்களை பாதிக்காது என்றபோதிலும், விவசாய பெருமக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரை பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விஷயத்தில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.