எலி பிடிக்க செலவு இவ்வளவு ஆகுமா? 70 லட்ச ரூபாய் ஓவர்! உண்மை என்னன்னா...
Rodent Control Expenses: எலி பிடிக்க எவ்வளவு செய்யலாம்? எத்தனையா இருந்தாலும், ஊருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது தானே?
கடந்த மூன்று ஆண்டுகளில், 168 எலிகளைப் பிடிக்க, 69.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, சமீபத்தில், இந்திய ரயில்வே குறித்து கூறப்பட்டது. சமீபத்தில் இந்திய ரயில்வே பற்றிய ஒரு செய்தி வைரலானது. கடந்த 3 ஆண்டுகளில் 168 எலிகளைப் பிடிக்க வடக்கு ரயில்வே 69.5 லட்சம் ரூபாய் செலவிட்டதாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு எலியை பிடிக்க சுமார் 41 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்ற செய்தி வைரலானது.
பிஐபி உண்மை சரிபார்ப்பு
இந்த செய்திகளைத் தொடர்ந்து, அரசாங்க செய்தி நிறுவனமான PIB, உண்மை என்ன என்பதைப் பற்றி செய்தி சரிபார்ப்பு சோதனையை மேற்கொண்டது. பிஐபியின் கூற்றுப்படி, இந்த செய்தி தவறானது. மேலும், எலிகள் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றில் இந்திய ரயில்வே எவ்வளவு செலவழித்தது என்பது தொடர்பான தரவுகளை PIB பகிர்ந்துள்ளது.
சராசரி செலவு 25 ஆயிரம் ரூபாய்
தடுப்பு நடவடிக்கையாக இந்திய ரயில்வே செய்த செலவுகளில் பூச்சி கட்டுப்பாடு செலவும் ஒன்று. கரப்பான் பூச்சிகள், எலிகள், மூட்டைப்பூச்சிகள், கொசுக்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். வடக்கு ரயில்வேயில் இதுதொடர்பான பராமரிப்பை லக்னோ பிரிவு மேற்கொள்கிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஆண்டுதோறும் சராசரியாக ரூ.25 ஆயிரம் செலவிடப்படுகிறது.
செய்தியில் கூறப்பட்டதுஎன்ன?
வடக்கு ரயில்வேயின் லக்னோ பிரிவு, ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ரூ.23.2 லட்சம் செலவிட்டதாக ஆர்டிஐக்கு பதிலளித்ததாக ஒரு செய்தித்தாள் தனது செய்தியில் கூறியுள்ளது. அதன்படி மூன்றாண்டுகளில் ரூ.69 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றும், எலி ஒன்றை பிடிக்க சுமார் 41 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி கூறியது.
மேலும் படிக்க | ரயில்வே வழங்கிய மாஸ் செய்தி.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. உடனே படிக்கவும்
வடக்கு ரயில்வே
பூச்சிகளின் தொல்லையைத் தவிர்க்க, லக்னோ பிரிவு, மத்திய கிடங்கு கார்ப்பரேஷன் கோமதி நகருக்கு பொறுப்பை வழங்கியுள்ளது. எலிகளால் சிக்னல் அமைப்பு சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒரு எலியை பிடிக்க வடக்கு ரயில்வே 41 கோடி ரூபாயை செலவழிக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எலி பிடிப்பு என்பது மாநில அரசுக்கு பல நேரங்களில் சங்கடத்தைக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அமைந்ததும், எலி பிடிக்கும் செலவுக்கான சர்ச்சை மிகப் பெரியதாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
ஆந்திரப்பிரதேசத்தில் எலிபிடிப்பு செலவு
கோதாவரி புஷ்கரம், தண்ணீர் பாக்கெட்டுகள், எலி பிடிப்பு, கொசு ஒழிப்பு போன்றவற்றுக்கு சந்திரபாபு நாயுடு அரசு செய்த செலவுகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்தன. எலியைப் பிடிக்க நாயுடுவின் அரசு ரூ.6 லட்சம் கொடுத்ததாகவும் அப்போது, கொசு ஒழிப்பு என்ற பெயரில் பணம் விரயமாக்கப்பட்டதாகவும் விவாதங்கள் எழுந்தன. இருப்பினும், நாயுடுவை குறிவைத்து இந்த குழு அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அதற்கான விளக்கத்தையும் மாநில அரசு அளித்தது.
மாநில அரசு, எதிர்காலத்தில் இதுபோன்ற விரயங்களைத் தவிர்ப்பதற்கான ஓட்டைகளைக் கண்டறிந்து அமைப்புகளை உருவாக்குவதற்காக முதலமைச்சர் உருவாக்கிய துணைக்குழு அது என்று அப்போதைய நிதியமைச்சர் பதிலளித்தார். வீடுகள் முதல், மாநில அரசு வரைக்கும் எலித்தொல்லையும், கொசுத்தொல்லையும் பாடாய்படுத்துகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ