என்னது? 15 வருசமா சம்பளத்தை அதிகரிக்கவே இல்லையா? பாவம் முகேஷ் அம்பானி!
No Increase In Salary For Ambani: முகேஷ் அம்பானியின் ஆண்டு சம்பளம் என்ன? ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் RIL தலைவராக எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
புதுடெல்லி: ஏப்ரல் 2023 இல் ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, போட்டியாளரான கௌதம் அதானி 24-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பெற்றார். இந்த அறிக்கை ஃபோர்ப்ஸ் பில்லியனர் 2023 பட்டியலில் வெளியிடப்பட்டது. ஃபோர்ப்ஸ் ரியல் டைம் நிகர மதிப்பு 19 ஜூலை 2023 இன் படி முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு $101 பில்லியன் (தோராயமாக 82,93,46,35,00,000.00 இந்திய ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணக்காரர் என்றாலே, முதலில் நினைவுக்கு வரும் பெயர் அம்பானி என்று சொல்லும் அளவுக்கு அம்பானி குடும்பத்தினர் பிரபல பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால், முகேஷ் அம்பானியும் சம்பளம் வாங்குகிறார் என்பது பலருக்குத் தெரியாது. அவர் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பவர் மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருகிறனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடமிருந்து அதன் எம்.டி மற்றும் தலைவராக, முகேஷ் அம்பானி சம்பளம் வாங்குகிறார். அம்பானி குடும்பம் பல ஆண்டுகளாக நெட்டிசன்களிடையே பிரபலமான குடும்பமாகிவிட்டது. அவர்களின் வாழ்க்கை முறை என்ன, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் மற்றும் பிற விஷயங்களில் தனிநபர்களாக எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என அவர்களைப் பற்றிய பல விஷயங்கள் கூகுளில் அதிக அளவு தேடப்படுகிறது.
கடந்த 11 ஆண்டுகளாக முகேஷ் அம்பானியின் சம்பளம் 15 கோடி ரூபாய் தான். நிர்வாக இழப்பீட்டு நிலைகளில் மிதமான தன்மைக்கு ஒரு தனிப்பட்ட உதாரணத்தை நிறுவுவதற்காக, முகேஷ் அம்பானி, RIL இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராஜ 2008-09 முதல் தனது சம்பளத்தை ரூ.15 கோடி என்ற அளவில் நிர்ணயித்துக் கொண்டார்.
ஏனெனில், அவர் ஆண்டுக்கு ரூ.24 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கிக் கொண்டிருர்ந்தார். ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகும் என்னும்போது, ஒரு நபருக்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகபட்ச ஊதியத்திற்கு வரம்பு நிர்ணயிப்பது சரியானது என்று முடிவு செய்து, தனக்கான சம்பளத்தையும் அந்த வரையறைக்குள் கொண்டு வந்து முன்னுதாரணத்தை உருவாக்கிவிட்டார் முகேஷ் அம்பானி.
கோவிட்-19 பரவலின் போது முகேஷ் அம்பானி ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லை
கொரோனா தொற்றுநோய், வணிகத்தையும் பொருளாதாரத்தையும் பாதித்த நிலையில், கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனது முதன்மை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடமிருந்து சம்பளத்தைப் பெற விரும்பவில்லை. 2020-21 நிதியாண்டுகளுக்கு அம்பானி "பூஜ்யம்" சம்பளம் பெற்றதாக ரிலையன்ஸ் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சமூக, பொருளாதார மற்றும் தொழில்துறை ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கோவிட்-19 தொற்று காரணமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் டி. அம்பானி, பல ஆண்டுகளாக தனது வருமானத்தை தானாக முன்வந்து கைவிடத் தீர்மானித்தார்.
அம்பானி இந்த இரண்டு வருடங்களிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தனது பதவிக்காக அலவன்ஸ், பெர்க்யூசிட்டுகள், ஓய்வூதிய பலன்கள், கமிஷன்கள் அல்லது பங்கு விருப்பங்களை பயன்படுத்தவில்லை.
ரிலையன்ஸ் வருவாய் பதிவுகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதன் மார்ச் காலாண்டில் 19 சதவீதம் உயர்ந்து நிகர லாபம் ரூ.19,299 கோடியாக இருந்தது என்று ஒரு நிறுவனத்தின் பங்குச் சந்தை தாக்கல் தெரிவித்துள்ளது. ஜனவரி-மார்ச் 2023 இல் ரூ. 19,299 கோடி நிகர லாபம் ஈட்டியது. இதுவே நிறுவனத்தின் அதிகபட்ச காலாண்டு நிகர லாபமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ