8th Pay Commission: சம்பளத்தில் பெரிய ஏற்றம்.. ஊழியர்கள் காத்திருக்கும் ‘அந்த’ அறிவிப்பு விரைவில்

8th Pay Commission, Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரிசையாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் புதிய ஊதிய கமிஷன் பற்றிய செய்திகளுக்காக ஊழியர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மிக விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இதனுடன், ஓய்வூதியதாரர்களும் பெரும் நன்மைகளைப் பெற உள்ளனர். 8 ஆவது சம்பள கமிஷன் தொடர்பாக அரசு தரப்பில் பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆவது ஊதியக் குழுவுக்காக நீங்களும் காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு சிறந்த செய்தி கிடைத்துள்ளது.

1 /8

8 ஆவது ஊதியக்குழு: மிக விரைவில் 8 ஆவது ஊதியக் குழுவை அரசு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அரசு வட்டாரங்களில் பல வித பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 /8

நீண்ட நாள் கோரிக்கை: 8 ஆவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அடுத்த ஊதியக்குழு அமைப்பதற்கான நேரமும் வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

3 /8

ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம்: 8 ஆவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், அதனுடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் மாற்றம் செய்யப்படும். ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையி கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4 /8

7வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்கு இருந்தது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த உயர்வின் காரணமாக, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 ஆனது. 

5 /8

44.44% ஊதிய உயர்வு: 8வது ஊதியக் குழுவின் கீழ், இம்முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் உயரும்.

6 /8

குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கும்: அரசு 8வது ஊதியக் குழுவை பழைய ஊதியக்குழுவின் அடிப்படையிலேயே அமைத்தால், அப்போது ஊதியத்தின் அடிப்படை ஃபிட்மெண்ட் பேக்டராக இருக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு என்ற கணக்கில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ. 26 ஆயிரமாக அதிகரிக்கலாம்.

7 /8

பொதுத்தேர்தல்கள்: அடுத்த ஆண்டு நாட்டில் பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ளதால், அரசு ஊழியர்களை மகிழ்விக்க மத்திய அரசு இந்த ஆண்டு 8 ஆவது ஊதியக்குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8 /8

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு : புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அடுத்த ஊதியக்குழுவுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.