சுத்திகரிப்பாளர்கள் சோப்புகள், டெட்டோல் போன்ற கிருமிநாசினிகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி நிர்ணயிப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது... 
 
கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் அதிகம் உபயோகிக்கும் மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் இவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, இவை அத்தியாவசியப் பொருளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவாவைச் சேர்ந்த ஸ்ப்ரிங்ஃபீல்ட் என்னும் நிறுவனம் ஆல்கஹால்  கலந்த சானிடைசர்கள் தயாரித்து வருகிறது. இதற்கு தற்போது 18% GST விதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு அமைப்பான மேம்படுத்தப்பட்ட அரசு ஆணையத்துக்கு ஸ்ப்ரிங்ஃபீல்ட் நிறுவனம் ஒரு விளக்கம் கோரியது. அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கு 12% GST விதிக்கப்படுவதால் இதையும் அந்த விகிதத்தில் இணைக்க முடியுமா எனக் கேட்டது. இதற்குப் பதில் அளித்த ஆணையம் இந்த குறிப்பிட்ட வகைப் பொருட்கள் 18% GST-யின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதாகப் பதில் அளித்துள்ளது.


மேலும், இந்த சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வருவதையும் உறுதி செய்துள்ளது. அத்தியாவசிய பொருள் எனப் பட்டியலிட்ட பிறகும் இந்த கொள்ளை நோய் பரவும் நேரத்தில் அரசு அதிக வரி விதிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 


READ | COVID-19 தடுப்பூசி பாதுகாப்பானது; ஜூலை இறுதிக்குள் தயாராகும்: ரஷ்யா


இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்.... "சோப்பு, டெட்டால் மற்றும் இதர பாக்டீரியா எதிா்ப்பு திரவங்களைப் போல சானிடைசரும் கிருமிநாசினி தான். எனவே அவற்றைப் போலவே கை சுத்திகரிப்பானுக்கும் 18% GST வரி விதிக்கப்படும். அத்துடன், கை சுத்திகரிப்பான் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு ரசாயனங்கள், உள்ளீடுகள், கை சுத்திகரிப்பானை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் 18% GST விதிக்கப்படும். சானிடைசர் மற்றும் அதைப் போன்ற இதர பொருள்களுக்கான GST வரியை குறைக்கும் பட்சத்தில் இறக்குமதியானது மலிவானதாகி உள்நாட்டு உற்பத்தியாளா்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். 


இது சுயச்சாா்பு இந்தியா திட்டத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்பதுடன், GST குறைப்பின் பலன் நுகா்வோரையும் சென்றடையாது என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. ஆல்கஹாலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கை சுத்திகரிப்பானுக்கு 18% GST வரி வதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.