கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு ஆகும் செலவை இன்னும் அதிகரிக்கும் விதமாக, பாரத ஸ்டேட் வங்கி அதன் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சில கட்டணங்களைத் திருத்தியுள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும். எனவே, நவம்பர் 15-ஆம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணங்கள் பொருந்தாது. இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், "அன்புள்ள கார்டுதாரரே, உங்கள் கிரெடிட் கார்டில் உள்ள கட்டணங்கள் 15 நவம்பர் 22 முதல் திருத்தப்படும்” என கூறியுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்வையிடுமாறும் வங்கி தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


எஸ்பிஐ இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களைத் திருத்தியிருந்தாலும், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாடகை செலுத்துவதற்கு புதிய கட்டணத்தை வங்கி விதித்துள்ளது. "உங்கள் கிரெடிட் கார்டின் கட்டணங்கள் நவம்பர் 15-22 முதல் திருத்தப்படும். மர்சண்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணம் ரூ. 199 பொருந்தக்கூடிய வரிகள் ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது முன்னர் ரூ. 99 + பொருந்தக்கூடிய வரிகள் என இருந்தது. வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணம் ரூ. 99 + பொருந்தக்கூடிய வரிகள் ஆக இருக்கும்" என்று வங்கி கூறியுள்ளது.



மேலும் படிக்க | கிரெடிட் கார்டு Bill-ஐ Google Pay மூலம் செலுத்தலாம்; ஈஸியான வழிமுறை 


இருப்பினும், பரிவர்த்தனை நவம்பர் 15க்கு முன் செய்யப்பட்டு பில்லிங் சைக்கிள் நவம்பர் 15க்குப் பிறகு இருந்தால், அந்தப் பரிவர்த்தனைகளுக்குப் புதிய கட்டணங்கள் பொருந்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


இதன் மூலம், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாடகை செலுத்துவதற்கு செயலாக்கக் கட்டணம் விதிக்கும் இரண்டாவது வங்கியாக எஸ்பிஐ ஆனது. முன்னதாக, ஐசிஐசிஐ வங்கி தனது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் அக்டோபர் 20 முதல் வாடகை செலுத்துவதற்கு ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்தது.


RedGiraffe, Mygate, Cred, Paytm மற்றும் Magicbricks போன்ற பல்வேறு மூன்றாம் தரப்பு தளங்கள், தங்கள் பயனர்களை (டெனண்டுகள்) தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாடகை செலுத்த அனுமதிக்கின்றன. இருப்பினும், இதற்குப் பதிலாக குறிப்பிட்ட சேவைக் கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள, பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை அந்த தளத்தில் உள்ளிட்டு, பின்னர் வாடகை செலுத்தும் விருப்பத்திற்குச் சென்று, பெயர், வங்கி கணக்கு எண், IFSC குறியீடு அல்லது உரிமையாளரின் UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) முகவரி போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். இதன் பிறகு பயனர்கள் கட்டணத்தை செலுத்தலாம். 


மேலும் படிக்க | Investment Tips: இதில், இப்படி முதலீடு செய்தால் போதும், சில ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ