பண்டிகை காலம் தொடங்கிய உடனேயே பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பாக இஎம்ஐ-இல் பணம் செலுத்துபவர்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இஎம்ஐ-இல் பொருட்களை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கும் எளிதாகிறது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே, கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் சில சிறப்பு விஷயங்களை கவனித்துக் கொள்ளவது அவசியமாகும்.
கிரெடிட் கார்டு EMIஐப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?
கிரெடிட் இஎம்ஐ-யின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், வாடிக்கையாளர்கள் விலையுயர்ந்த பொருட்களை எளிதான தவணைகளில் வாங்க முடியும். இந்த கட்டணத்தை நீங்கள் சிறிய பகுதிகளாக செலுத்தலாம். பயனர்களின் வசதிக்காக தொகையை செலுத்துவதற்கு சில மாதங்கள் முதல் 1-2 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு EMIகள் எவ்வாறு வேலை செய்கின்றன
கிரெடிட் கார்டு EMIகளை இரண்டு வழிகளில் தொடங்கலாம். முதல் முறை, நேரடி இஎம்ஐ- இல் (டைரக் இஎம்ஐ) பொருட்களை வாங்குவது. இரண்டாவது முறையில், நீங்கள் மொத்த கிரெடிட் கார்டு செலவினத்தை EMI-களாகப் பிரிக்கலாம். ஆனால் அதற்கு, நீங்கள் அந்த தொகைக்கான வட்டியை கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Pan Card: இரண்டு பான்கார்டு ரூ.10 ஆயிரம் அபராதம்; அரசு அதிரடி உத்தரவு
இந்த வட்டியின் நிர்ணயம் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரையும் சார்ந்துள்ளது. எனவே செயலாக்க கட்டணம் மற்றும் பணம் செலுத்துவதில் தாமதம் ஆகியவற்றில் அபராதம் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இது தவிர, நிறுவனங்கள் சில நேரங்களில் இஎம்ஐ-களில் நோ காஸ்ட் இஎம்ஐ- களுக்கான வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ஆனால் இதற்கு நீங்கள் நிலையான கால அளவை (டென்ன்யூர்) தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட காலத்தைத் தேர்ந்தெடுத்தால், அதிக வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இஎம்ஐ-களைத் தேர்ந்தெடுக்கும்போது, வட்டி விகிதத்திலும் கவனம் செலுத்துங்கள்.
பிளாட் ரேட் முறை
கடன் தொகை தொடர்ந்து செலுத்தப்பட்டு வரும்போது, ஒவ்வொரு வட்டியின் தொகை அசல் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இஎம்ஐ-ஐ கணக்கிட, கடனின் அசல் தொகையும் மொத்த வட்டியின் தொகையும் கூட்டப்படுகின்றன. பின்னர் இந்த தொகை கடனை திருப்பிச்செலுத்தும் மொத்த மாதங்களின் எண்ணால் வகுக்கப்படும். இது பிளாட் ரேட் உத்தி என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தனிநபர் மற்றும் வாகனக் கடன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ