புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கி (The State Bank of India (SBI)) நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதாவது 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் (2024 ஜூன் 15) நடைமுறைக்கு வந்தது, அதாவது MCLR உடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி அதிகரித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாற்றத்திற்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட MCLR விகிதங்களின் விளக்கமான தரவுகள்...


ஒரு வருட MCLR: 8.65% லிருந்து 8.75% ஆக அதிகரித்துள்ளது


ஒரே இரவில் MCLR: 8.00% இலிருந்து 8.10% ஆக அதிகரித்துள்ளது


ஒரு மாதம் மற்றும் மூன்று மாத MCLR: 8.20% இலிருந்து 8.30% ஆக அதிகரித்துள்ளது


ஆறு மாத MCLR: 8.55% லிருந்து 8.65% ஆக அதிகரித்துள்ளது


இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர்: 8.75% லிருந்து 8.85% ஆக அதிகரித்துள்ளது


மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர்: 8.85% லிருந்து 8.95% ஆக அதிகரித்துள்ளது


மேலும் படிக்க | 15 நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 2 வாரத்தில் நல்ல லாபம் தரும் பங்குகள்!


இந்த MCLR விகித அதிகரிப்பால், ஒரு வருட MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீடு மற்றும் வாகனக் கடன்கள் என பெரும்பாலான கடன்கஅதிகரிக்கும். வணிக விரிவாக்கத்தை அதிகரிக்க பத்திரங்கள் மூலம் 100 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.830 கோடி) திரட்டியதாக எஸ்பிஐ இன்று (2024 ஜூன் 15 வெள்ளிக்கிழமை) அறிவித்தது.


அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கம் குறித்த கவலையின் காரணமாக, ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) முடிவுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 2019 முதல், SBI உள்ளிட்ட வங்கிகள் இந்த வெளிப்புற வரையறைகளுடன் புதிய கடன்களை இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், இது பணவியல் கொள்கையின் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது.  


மேலும் படிக்க | 432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!


MCLR என்றால் என்ன?


நிதி அடிப்படையிலான கடன் விகிதமான எம்சிஎல்ஆர் என்பது இந்திய ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு நிர்ணயிக்கும் உள் குறிப்பு விகிதமாகும். பல்வேறு வகையான கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை வரையறுக்க இந்த எம்சிஎல்ஆர் விகிதம் வங்கிகளுக்கு உதவுகிறது. இந்த எம்சிஎல்ஆர் விகிதம் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.


வங்கிகள் MCLR விகிதத்திற்குக் கீழே கடன் கொடுக்க முடியாது, அப்படி நிர்ணயித்தால் வங்கிகள் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், ரிசர்வ் வங்கியின் முன் அங்கீகாரத்துடன் சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், வங்கிகள் MCLR க்குக் கீழே கடன் கொடுக்க முடியும்.


கடனுக்கான வட்டி விகிதம் என்பது, கடன் வாங்குபவருக்கான கடன் ஏற்பாடு செய்வதற்கான செலவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. MCLR அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக அதாவது 2016 ஏப்ரல் மாதத்திற்கு முன் கடன் வாங்கியவர்கள், பழைய அடிப்படை விகிதம் மற்றும் பெஞ்ச்மார்க் ப்ரைம் லெண்டிங் ரேட் (BPLR) முறையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை செலுத்தி வருகின்றனர். அவர்கள் விரும்பினால், MCLR விகிதத்தைத் தேர்வு செய்யலாம்.


மேலும் படிக்க | பெஸ்ட் பங்குச்சந்தை சென்செக்ஸ் தான்! ஓராண்டில் 82000 புள்ளிகளை கடக்கும்! Moody's கணிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ