தொழிலாளர்களை பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 அபராதம்!

Penalty Imposed To Fire Cracker Factories : சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 43 தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 15, 2024, 06:14 PM IST
  • சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் தொடரும் தீவிபத்து
  • போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத தொழிற்சாலைகளுக்கு அபராதம்
  • விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை
தொழிலாளர்களை பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 அபராதம்! title=

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 43 தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் போர்மேன் பணிக்கான கல்வித் தகுதியுடைய கல்லூரிகளில் இளங்கலை வேதியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என  தொழிலக பாதுகாப்பு பயிற்சி மைய இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மே 9-ம் தேதி சுதர்சன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து விதிமுறை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கடந்த 29-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு குழு உறுப்பினர் கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர் பாதுகாப்பு பயிற்சி மையத்தில் வரும் 13ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, இருபதாம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மற்றும் 24 முதல் 27ஆம் தேதி வரை மற்றும் 27 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆகிய வாரங்களில்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போர்மேன் மற்றும் தொழிலாளருக்கு பயிற்சி நடைபெற உள்ளதாக சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்

இதில் பயிற்சிக்கு வராத பட்டாசு தொழிற்சாலை போர்மேனுக்கு, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி மையத்திலிருந்து அஞ்சல் மூலமாக தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. முதல் முறை அழைத்து வராதவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது முறை அழைப்பு விடுத்து வரதாவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மூன்றாவது முறை அழைத்து வராதவர்களுக்கு உரிமம் ரத்து செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் முதல் முறை பயிற்சிக்கு அழைப்பு விடுத்து போர்மேன்களை  அனுப்பாத 43 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 5000 அபராத கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. என்றும் 2வது முறையாக பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராத கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு பயிற்சி மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் முறையாக சிவகாசி அரசு கல்லூரிகளில் வேதியியல் மூன்றாமாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு போர்மேன் பணிக்கு தகுதி உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 12 மாணவ மாணவிகளுக்கு போர்மேன் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக படித்து முடித்தவுடன் பட்டாசு ஆலைகளில் போர்மேன் பணிக்கு இளங்கலை வேதியல் பட்டம் மற்றும் போர் மேன் சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமில்லை-துரை வைகோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News