SBI Alert: இந்த தவறை செய்தால் மொத்த பணமும் காலி, QR Code scan பற்றி எச்சரித்தது SBI
SBI அவ்வப்போது தனது வாடிக்கையாளருக்கான பாதுகாப்பான வங்கி நடைமுறைகளுக்காக எச்சரிக்கைகள், பயிற்சிகள் மற்றும் தகவல்களை வெளியிடுகிறது. சமீபத்தில், கியூஆர் ஸ்கேன் (QR Scan) தொடர்பான எச்சரிக்கையை SBI வெளியிட்டது.
புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. இருப்பினும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இன்றையா காலகட்டத்தில் அதிகமான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகள் பக்கம் செல்கிறார்கள். ஆகையால், இது தொடர்பான மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) சமூக ஊடகங்களில் மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. SBI அவ்வப்போது தனது வாடிக்கையாளருக்கான பாதுகாப்பான வங்கி நடைமுறைகளுக்காக எச்சரிக்கைகள், பயிற்சிகள் மற்றும் தகவல்களை வெளியிடுகிறது. சமீபத்தில், கியூஆர் ஸ்கேன் (QR Scan) தொடர்பான எச்சரிக்கையை SBI வெளியிட்டது.
ALSO READ: SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: இனி பண பரிமாற்றத்திற்கு இது கண்டிப்பாகத் தேவை
ஒருபோதும் கியூஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்யக்கூடாது என்று SBI தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இப்படி செய்யாமல் இருந்தால், மக்கள் ஆன்லைன் மோசடிக்கு ஆளாவதை அதிக அளவில் தடுக்கலாம் என்றும் SBI அறிவுறுத்தியுள்ளது.
"நீங்கள் ஒரு க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதால் உங்களுக்கு பணம் கிடைக்காது. உங்களுடைய வங்கி கணக்கிலிருது ஒரு குறிப்பிட்ட தொகை டெபிட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும். பணம் செலுத்துவதற்கான குறிக்கோள் இல்லாதவரை, மற்றவர் பகிரும் #QRCodes-ஐ ஸ்கேன் செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று SBI ட்வீட் செய்துள்ளது.
ஒரு கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதால் உங்கள் மொத்த கணக்கும் மோசடி நபர்களால் (Frauds) எப்படி காலி செய்யப்படலாம்என்பதை விளக்கும் வீடியோவையும் SBI பகிர்ந்துள்ளது. இது குறித்த விளக்கத்தை நன்கு புரிந்துகொள்ள இந்த வீடியோ டுடோரியலைப் பாருங்கள்.
இதுமட்டுமல்லாமல், வங்கி பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற, SBI ஒன் டைம் கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான லாக் இன்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. OTP அடிப்படையிலான கடவுச்சொல் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்புக்கான மற்றொரு அடுக்கை சேர்க்கும் என்று SBI கூறுகிறது. உங்கள் மொபைல் தொலைபேசியில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கி சார்பில் ஒரு எச்சரிக்கையை பெற நீங்கள் விரும்பினால், உங்கள் SBI கணக்கில் உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை (OTP) அமைக்க வேண்டும்.
ALSO READ: State Bank of India வங்கியில் உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை எவ்வாறு அமைப்பது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR