நடுத்தர வர்க்கத்தில் உள்ள பலர், வருமான வரி விதிப்பில் இருந்து தப்புவதற்காக முதலீடு செய்கின்றனர். அதற்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் மிகச்சிறந்த சேமிப்பு திட்டம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) சிறந்த பிபிஎப் சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது.


அதன் முக்கிய அம்சங்கள்


1. ஆண்டு ஒன்றுக்கு இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயும், அதிகபட்சம் 1,50,000 ரூபாயும் முதலீடு செய்யலாம்.


2. முதலீட்டு காலம் 15 ஆண்டுகள். அதன்பிறகு, விரும்பினால், மேலும் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீட்டிக்கலாம்


3. இதன் வட்டி விகிதம் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது இதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆகும்


4. கணக்கு வைத்திருப்பவரின் வயது மற்றும் குறிப்பிட்ட தேதியில் கணக்கில் உள்ள பணத்தை பொறுத்து கடன் பெறலாம். தேவைப்பட்டால் பணத்தை எடுக்கலாம்.


5. இதற்கு வருமான வரி சட்டத்தின் 88 வது பிரிவின் கீழ் வருமான வரி சலுகைகள் கிடைக்கின்றன


6. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை நாமினேட் செய்யலாம். 


7. உங்கள் கணக்கை பிற கிளைகள் / பிற வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். இதற்கான சேவை இலவசமாக வழங்கப்படும்.


இதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும்


1. இதில், ஆண்டுக்கு ரூ .1,50,000 க்கு மேல் டெபாசிட் செய்யக்கூடாது. ஏனெனில் அதிகப்படியான தொகை எந்த வட்டியையும் கிடைக்காது என்பதோடு, வருமான வரிச் சட்டத்தின் கீழ் சலுகையும் பெறாது. இந்த தொகையை மொத்த தொகையாகவோ அல்லது தவணைகளாகவோ டெபாசிட் செய்யலாம்


2. இதிலிருந்து கிடைக்கும் வட்டிக்கு, வருமான வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். 


3. உயிர் காக்கும் சிகிச்சை, குழந்தைகளுக்கான கல்வி, வேறு நாட்டிற்கு குடியேறுதல் போன்றவற்றிற்கு, தேவையான ஆவணங்களை அளித்து, கணக்கில் இருந்து முழுமையாக பணத்தை எடுத்து  கணக்கை மூடலாம்.