புது டெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI) இணைய வங்கி போர்டல் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான வசதிகளை வழங்குகிறது. இந்த சேவையில், SBI வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு நிலுவை, நிதி பரிமாற்றம், புதிய காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை மற்றும் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சேவைகளைத் தவிர, வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகை மற்றும் தொடர்ச்சியான வைப்பு கணக்குகளை எஸ்பிஐயில் இணைய வங்கி (Internet Banking) மூலம் உருவாக்கும் வசதியும் கிடைக்கிறது. இணைய வங்கியைப் பயன்படுத்த பயனர்பெயர் மற்றும் உள்நுழைவு கடவுச்சொல் தேவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI இணைய வங்கி (Internet Banking) வசதி உங்கள் வீடுகளின் பாதுகாப்பு மற்றும் வசதியுடன் வங்கி பரிவர்த்தனைகளை நடத்த உங்களை அனுமதிக்கிறது. இந்த சேவையின் மூலம், நீங்கள் எங்கும், எந்த நேரத்திலும் பரிவர்த்தனை செய்யலாம்.


ALSO READ:  கார் வாங்கணுமா? Maruti Suzuki அளிக்கிறது அதிரடியான கார் கடன்கள்: விவரம் உள்ளே


வாடிக்கையாளர் வீட்டில் உட்கார்ந்த படி இணைய வங்கி மூலம் மொத்தம் 8 பணிகளை கையாள முடியும் என்று எஸ்பிஐ தனது ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்துள்ளது. 


பண பரிவர்த்தனை, ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பித்தல், டெபாசிட் கணக்கு தொடர்பான வேலை, பில் செலுத்துதல், வங்கி கணக்கு அறிக்கையை சேமித்தல், காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பித்தல், யுபிஐ தொடங்க மற்றும் நிறுத்த, வரி செலுத்துதல் போன்றவற்றை இதில் அடங்கும். 


 



ALSO READ: Honda City மற்றும் Swift Dzire கார்களை குறைவான விலையில் வாங்குவது எப்படி?


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR