Mobile Phone Business Ideas : நம் நாட்டை பொறுத்தவரை தற்போது பல லட்சம் இளைஞர்கள், கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஒரு வேலையில் சேர்ந்து விட்டு, அதற்கடுத்து வெகு விரைவிலேயே தாெழில் முனைவோராக மாற ஆரம்பித்து விடுகின்றனர். கையில் பெரிய அளவிற்கு முதலீடு எதுவும் இல்லையென்றாலும் கூட, தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்தும், கையில் இருக்கும் திறனை வைத்தும் இவர்கள் தாெழில் தொடங்க ஆரம்பிக்கின்றனர். இன்னும் சிலரும் இருக்கின்றனர். அவர்கள், முழு நேர வேலை பார்த்துக்காெண்டே இடையில் தாங்கள் வைத்திருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் நிர்வகித்து கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதாேடு மட்டுமன்றி, அவர்களை தொழில் முனைவாேராகவும் மாற்றுகிறது. அப்படி, கையில் இருக்கும் மொபைல் போனை வைத்தே நாம் ஆரம்பிக்கக்கூடிய சில தொழில்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்டண்ட் கிரியேட்டர் (Content Creator):


இந்த டிஜிட்டல் யுகத்தில் தெருவுக்கு தெரு பல ஆயிரம் செலிபிர்ட்டிகள் இருக்கின்றனர். இவர்கள் ஆன்லைன் தளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாகி content creator ஆக வலம் வருகின்றனர். இவர்கள், நடிப்பு, நடனம், சினிமா, விளையாட்டு, உடற்பயிற்சி என பலதரப்பட்ட துறைகளில் இருக்கின்றனர். இதுவும், இப்போது ஒரு பெரிய சுய தொழிலாக  உருவெடுத்து வருகிறது. இதனால் ஒரு சிலர் ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் வரை சம்பாதிக்கின்றனர். 


சேவை வழங்குபவர் (Service Provider):


மொபைலில் LinkedIn செயலி மூலமாக, நீங்கள் நிபுணத்துவம் வாய்ந்த துறை குறித்து பிறருக்கு தெரியப்படுத்தும். பிற சமூக வலைதளங்கள் போல, இந்த தளமும் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இதன் மூலமாக உங்களுக்கு எந்த துறையில் அதிக அனுபவம் இருக்கிறதோ அதை ஆன்லைனில் கற்றுக்கொடுக்கலாம். அதற்கு ஏற்ற கட்டணத்தையும் வகுக்கலாம். இது, சரியான ஆடியன்ஸை சென்றடைந்தால் பெரிய தொழிலாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. 


மேலும் படிக்க | கடந்தாண்டு 17,545 கோடி-இந்த ஆண்டு தெருக்காேடி! பைஜு ரவீந்திரன் சொத்துக்களை இழந்தது எப்படி?


வீடியோ கிராஃபி/போட்டோகிராபி (Photography/Videography): 


நீங்கள், நன்றாக போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் திறமை கொண்டவராக இருந்தால் நல்ல கேமரா மற்றும் ஸ்டோரேஜ் இருக்கும் போனை வாங்கிக்கொண்டு அதன் மூலமாகவும் தொழில் தொடங்கலாம். இது, உங்களை சமூக வலைதள இன்ஃபுளுவன்ஸராக மாற்றுவதற்கும் உதவும். நீங்கள் படம் பிடிக்கும் காட்சி வைரலானால், அதற்கு நீங்கள் லைசன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இதனால், யார் உங்களது கண்டன்டை உபயோகித்தாலும் அவர் உங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 


டிஜிட்டல் மார்கெட்டிங் (Digital Marketing):


தொழில் நிறுவனங்களில் இருந்து ஊடக நிறுவனங்கள் வரை, அனைவருக்கும் இப்போது டிஜிட்டல் மார்கெட்டிங் என்பது தேவைப்படும் ஒரு தொழிலாக இருக்கிறது. இதை கற்றுத்தருவதற்கு தற்போது ஆன்லைனிலேயே பல வழிகள் இருக்கின்றன. தற்போது யுகம் அனைத்தும் ட்ஜிட்டலாக மாறி வருவதால், இந்த திறனை கற்று வைத்துக்கொள்வதும் நல்லது என்கின்றனர் தொழில்துறை நிபுணர்கள். இந்த சேவையை ஃப்ரீலான்சிங் முறையில் நீங்கள் வழங்கினாலே, உங்களுக்கு வருமானம் தலைக்கு மேல் கொட்டுமாம். நீங்கள் தனியாக வாடிக்கையாளர்களை பிடிக்க ஆரம்பித்து விட்டால், இதை சுய தொழிலாகவும் நீங்கள் செய்ய தொடங்கலாம். 


மேலும் படிக்க | ‘இந்த’ பொருளை ரூ.600க்கு வாங்கி 6,000-ற்கு விற்கலாம்! சூப்பராக லாபம் பார்க்க ஐடியா..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ