"பேஸ்புக்(Facebook) நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு,குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் பெற்று தரும் வசதியை தொடங்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனை சிறு தொழில் கடன் நிறுவனமான "இண்டிஃபையுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் இண்டிஃபை நிறுவனத்தின் கடன் திட்டங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்படும். இதன் மூலம் தொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறலாம்.


இது போன்று "சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு  கடன்களை பெற்று தரும் திட்டத்தினை இந்தியாவில் (India) தான் முதன்முதலில் ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநகரங்கள், நகரங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு இந்த கடனுதவி கிடைக்கும்.  


இது குறித்து ஃபேஸ்புக் (Facebook)  நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவர் அஜீத் மோகன் செய்தியாளர்களுக்கு காணொலி மூலமாக அளித்த பேட்டியில் கூறுகையில் ஃபேஸ்புக் மூலம் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் எளிதாக கடன் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்.எங்களுடன்  இண்டிஃபை நிறுவனமும் இத்திட்டத்தின் வாயிலாக இணைந்துள்ளது.


ALSO READ | இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!


இதற்கடுத்த கட்டமாக மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.இத்திட்டத்தினை தொடங்குவதன் மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எந்த ஒரு வருவாயும் கிடைக்கப்போவதில்லை.ஃபேஸ்புக்கினை பயன்படுத்தி கடன் பெறுவதற்கு கட்டணம் ஏதும் நிறுவனம் வசூலிக்காது.இந்த திட்டம் சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோரையும் , ஃபேஸ்புக் நிறுவனத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக இது இருக்கும்.


ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 20 கோடி தொழில் நிறுவனங்கள் நாள்தோறும் ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.


இதனால் ஃபேஸ்புக் மூலமாக சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் முதல் 50லட்சம் வரை கடன் பெற முடியும்.வருடத்திற்கு 17 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வட்டி செலுத்தும்படி இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.


ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR