இந்தியா தாலிபான்களுடன் பேச்சு நடத்தியதா; வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன..!!

ஆப்கானிஸ்தானை தலிபான்ககள் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியா உட்பட பல நாடுகளின் குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்ற சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 19, 2021, 12:42 PM IST
  • ஐநா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா கலந்துரையாடுகிறது.
  • குடிமக்கள் தயாகம் அழைத்து வர முக்கியத்துவம்.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள, வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா சென்றார்.
இந்தியா தாலிபான்களுடன் பேச்சு நடத்தியதா; வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன..!!  title=

ஆப்கானிஸ்தானை தலிபான்ககள் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியா உட்பட பல நாடுகளின் குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்ற சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.  

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மாறி வரும் சூழ்நிலைகளை இந்தியா "மிகவும் கவனமாக" கண்காணித்து வருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதில் மத்திய அரசு முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறினார்.

ஐநா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா கலந்துரையாடுகிறது

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC)  நடத்திய கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார், "ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து கூட்டத்தில் முக்கியமாக பேசப்பட்டது. நான் இதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பிற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினேன்” என்றார். ஆகஸ்ட் மாதத்திற்கான பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

'குடிமக்கள் தயாகம் அழைத்து வர முக்கியத்துவம்'

PTI கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர்,' இந்த நேரத்தில், மற்றவர்களைப் போலவே, ஆப்கானிஸ்தானில் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்து நாங்கள் முக்கியமாக கண்காணித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்வதில் எங்கள் முழு கவனம் உள்ளது.

ALSO READ | "மெல்ல மெல்ல வரலாற்றில் காணாமல் போவோம்” : ஆப்கான் பெண்ணின் உருக்கமான வீடியோ

ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து UNSC அவசர கூட்டம்

ஆப்கானிஸ்தானின் (Afghanistan) நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை அமெரிக்கா (America) சென்றார். இந்தியாவின் தலைமையில், பத்து நாட்களுக்குள்,  ஐ.நா இரண்டாவது கூட்டத்தை நடத்தியுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் நிலைமை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுடன் நடந்த சந்திப்பின் போதும், பிற இருதரப்பு கூட்டங்களிலும், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதித்தார்.

இந்தியா சமீபத்தில் தலிபான்களுடன் பேசியதா?
 

கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் இந்தியா செய்த முதலீடுகள் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், "நீங்கள் முதலீடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினீர்கள். இது ஆப்கான் மக்களுடனான நமது வரலாற்று உறவை பிரதிபலிக்கிறது என்று நான் நம்புகிறேன். "இப்போது எங்கள் கவனம் அங்கு இருக்கும் (ஆப்கானிஸ்தான்) இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ளது ," என்று அவர் கூறினார். சமீபத்தில் தாலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதா என்ற கேள்விக்கு, ஜெய்சங்கர், "இந்த நேரத்தில், காபூலில் மாறி வரும் சூழ்நிலைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம்" என்றார். 

ALSO READ | தாலிபான் ஆட்சிக்கு முன்னும் பின்னும்: பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News