புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக, மே மாதம் புழக்கத்தில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து ரூ.1,000 நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்று பலரும் நம்பிக்கைத் தெரிவித்துவந்தனர். இருப்பினும், ரூ.1,000 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கவில்லை என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றதாக அறிவித்தார். அப்போது பேசிய அவர், 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.


மேலும் படிக்க | 'இதெல்லாம் பொய்யா?'  சிபில் ஸ்கோரை சுற்றியிருக்கும் கட்டுக்கதைகள்


1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற ஊகங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், "இது ஊகமானது. இப்போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை," என்றார்.


பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, கரன்சி நோட்டுகள் தொடர்பாக பல வகையான செய்திகள் அவ்வப்போது பெரிய அளவில் பேசப்படும். ஆனால் இப்போது பழைய 1000 ரூபாய் நோட்டு அறிமுகம் தொடர்பான செய்திகள் உண்மையாகாது என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.



பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ​​1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த அரசு, நாட்டில் கறுப்பு பணத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கையை எடுத்தது. அதன்பிறகு 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தாலும், சில ஆண்டுகளில் 2018-19ல் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.


2016 நவம்பரில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளுடன் புதிய ரூ.500 நோட்டுகளையும் அறிமுகப்படுத்தியது. அதில், தற்போது ஐநூறு ரூபாய் மட்டும் புழக்கத்தில் உள்ளது.


மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்


2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளுமாறு அரசு அறிவித்திருந்த நிலையில், பிறகு அந்த காலக்கெடு அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. அக்டோபர் 8-ம் தேதி முதல், ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தை மாற்றிக்கொள்ளவோ அல்லது பணத்தைப் பெறவோ விருப்பம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால், கள்ள நோட்டுகள் புழக்கம் ஒழிந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பும் பலரும், பாஜக அரசு நாடாளுமன்றத்தில் வைத்த தரவுகளை சுட்டிக் காட்டுகின்றனர். முன்பை விட கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கூறியிருந்தது.


தேசிய குற்ற ஆவண காப்பக்கத்தின் தரவுகளின்படி, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டில் 2, 272 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  2020ஆம் ஆண்டில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 834 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.   


மேலும் படிக்க - 2000 ரூபாய் நோட்டு குறித்து புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ