ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்க மறுத்த திரையரங்கம் ..! இளைஞர்கள் வாக்குவாதம்

பிச்சைக்காரன் 2 படம் பார்க்க சென்ற இளைஞர்களிடம் திரையரங்க ஊழியர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 25, 2023, 07:08 PM IST
  • 2 ஆயிரம் ரூபாய் தாள் வாங்க மறுப்பு
  • பிரபல திரையரங்கில் ஏற்பட்ட மோதல்
  • இளைஞர்களிடம் காவல்துறை விசாரணை
ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்க மறுத்த திரையரங்கம் ..! இளைஞர்கள் வாக்குவாதம் title=

புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. மே 23 ஆம் தேதி முதல் தங்களிடம் இருக்கும் தொகையை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு உத்தரவுகளை வழங்கியிருக்கிறது. நபர் ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்கு எந்த ஆவணங்களும் கொடுக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை மக்கள் மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து கடைக்காரர்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்திலும் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இது அரசு உத்தரவு ஏதும் இல்லையென்றாலும், ரூபாய் தாள்களை மாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பெரிய கடைக்காரர்கள் உள்ளிட்டோர் தாங்களாவே முன்னெச்சரிக்கையாக இப்படியொரு முடிவை எடுத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் பிரபல திரையரங்களில் படம் பார்க்க வந்த இளைஞர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்க மறுத்ததால், அவர்கள் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது திரையரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | விஷசாராய விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்..விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி போலீஸார்!

சென்னை போரூரை சேர்ந்த கோதண்டராமன் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைகாரன் 2 திரைப்படத்தை காண மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கம் சென்றுள்ளார். திரையரங்கில் 2 ஆயிரம் கொடுத்து 3 டிக்கெட்கள் எடுக்க முயன்றார்.  அப்போது, 2 ஆயிரம் நோட்டுகள் வாங்காமல் அருகே வைத்து இருந்த பதாகையை சுட்டிகாட்டியுள்ளனர். அதில் ரிசர்வ் வங்கி விரைவில் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதால், அந்த நோட்டுகள் இங்கு வாங்கப்படாது என்றும், வங்கிகளிலே உங்களது 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க சிறந்த இடம் என்றும், உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி என்றும் எழுதப்பட்டிருந்தது. 

அதனை பார்த்த அவர்கள் தங்களிடம் வேறு நோட்டுகள் இல்லை எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தற்போது அனைத்து இடங்களிலும் வாங்குவதாக செய்திகள் வெளியாவதாகவும், ஏன் திரையரங்கில் வாங்க மறுப்பதாக வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் படிக்க | அண்ணாமலை மீது கோவை பாஜக நிர்வாகி பரபரப்பு புகார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News