குறைந்த கட்டண உள்நாட்டு விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நாட்டின் முதல் சரக்கு-ஆன்-சீட் (cargo-on-seat) விமானத்தை அறிமுகம் செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் இருந்து சென்னைக்கு பறக்கும் இந்த விமானம், பயணிகள் அறை மற்றும் கைப்பைகள் வைக்கும் இடத்தில் முக்கிய பொருட்களை ஏற்றிச்செல்லும் என்று நிறுவனத்தின் ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. 



"இந்த விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு பறந்தது. சென்னையில் இருந்து சூரத்துக்கும் சூரத்திலிருந்து மீண்டும் சென்னைக்கும் இயக்கப்படுகிறது. மேலும் இந்த விமானம் சென்னையிலிருந்து மும்பை மற்றும் மும்பையில் இருந்து டெல்லி வரைஇயக்கப்படும்" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.



இந்த நடவடிக்கைக்காக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து இந்த விமான நிறுவனம் உரிய ஒப்புதல்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது, பின்னர் இந்த நோக்கத்திற்காக ஒரு Boeing 737 NG விமானத்தை நிறுவனம் நிறுத்தியதாகவும் தெரிகிறது.


குறித்த இந்த விமானம் இன்று ஐந்து சுழற்சிகளைச் செய்யும், மிக முக்கியமான நேரத்தில் மிக முக்கியமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய இந்த விமானம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. மேலும் 200 உள்நாட்டு மற்றும் சர்வதேச சரக்கு விமானங்களை இயக்கும் நிறுவனம் தற்போது சுமார் 1400 டன் சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்டுள்ளது.


ஸ்பைஸ்ஜெட்டின் கூற்றுப்படி, இருக்கைகளை மறைப்பதற்கு சுடர்-தடுப்பு பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சிறப்பு இருக்கை கவர்கள் பயன்படுத்தப்பட்டன, மேலும் இருக்கைகளில் உள்ள சரக்குகளை கட்டுப்பாடுகளுடன் பாதுகாத்து, "இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, மேல்நிலை தொட்டியும் பயன்படுத்தப்பட்டன."
 
டெல்லியில் இருந்து சென்னை வரை பயணிகள் அறை மற்றும் கைப்பைகள் வைக்கும் இடத்தில் 11 டன் முக்கிய பொருட்களை விமான நிறுவனம் கொண்டு செல்லும் எனவும் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.