SBI Alert: FD மோசடி; உங்கள் கணக்கில் உள்ள பணம் காலியாகலாம்
FD மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள SBI , வாடிக்கையாளர்கள், தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ட்வீட் செய்துள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆன்லைன் மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து ஆன்லைனில் நிலையான வைப்பு கணக்குகளை (Fixed Deposits) உருவாக்கியுள்ளனர் என்றும் கூறினார். எஸ்பிஐ (SBI) தனது வாடிக்கையாளர்களை தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் தங்கள் கணக்கிற்கான அணுகலைக் கட்டுப்படுத்துமாறு கேட்டு ஒரு ட்வீட்டை வெளியிட்டது. பாஸ்வேர்ட் / ஓடிபி / சிவிவி / அட்டை எண் போன்ற ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது. வங்கி மேற்கண்ட விவரங்கள் எதையும் தொலைபேசி, எஸ்எம்எஸ் அல்லது மெயில் மூலம் ஒருபோதும் கேட்காது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதனால், இதன் மூலம் தகவல்கள் கோரப்பட்டால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
ALSO READ | பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்; ₹74,300 பென்ஷன் தரும் அசத்தல் திட்டம்
"எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எஸ்பிஐ வங்கியை சேர்ந்தவர்கள் போல் தன்னை காட்டிக் கொள்பவர்கள் வீசிய வலையில் விழாதீர்கள், கடவுச்சொல் / ஓடிபி / சிவிவி / அட்டை எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை நாங்கள் ஒருபோதும் தொலைபேசியில் கேட்க மாட்டோம். எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்," எஸ்பிஐ ட்வீட் செய்தது.
சைபர் குற்றவாளிகள் முதலில், கிடைத்த ஒருவரது வங்கி விவரங்களைப் பயன்படுத்தி எஃப்.டி கணக்கை உருவாக்கி பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து பணத்தை மாற்ற முயல்வார்கள். பின்னர் பாதிக்கப்பட்டவரிடம் தன்னை வங்கி அதிகாரியாகக் காட்டிக் கொண்டு அவர்களின் OTP ஐக் கேட்கிறார். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்கள் OTP ஐப் பெற்றவுடன், இணைய குற்றவாளிகள் முழு FD தொகையையும் தங்கள் சொந்த கணக்கில் மாற்றிக் கொள்வார்கள்.
ALSO READ | CBSE Board Exams 2021: பொது தேர்வுகளை ரத்து செய்ய வலுக்கும் கோரிக்கை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR