பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்; ₹74,300 பென்ஷன் தரும் அசத்தல் திட்டம்

அரசு பணியில் இல்லாதாவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது வரமாகும். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்களின் வயதான காலத்தில் ஏற்படும் தேவைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2021, 01:41 PM IST
  • நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்களின் வயதான காலத்தில் ஏற்படும் தேவைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை இருக்கும்.
  • பாலிஸியை 30 வயதுக்கு மேற்பட்டது மற்றும் 85 வயதுக்குக் குறைவாக உள்ள எவரும் எடுக்கலாம்.
  • பாலிசியின் அடிப்படையில் நீங்கள் கடனையும் பெறலாம்.
பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்; ₹74,300 பென்ஷன் தரும் அசத்தல் திட்டம் title=

அரசு பணியில் இல்லாதாவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது வரமாகும். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்களின் வயதான காலத்தில் ஏற்படும் தேவைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை இருக்கும். அப்படி கவலைப்படுபவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக உள்ளது தான் இந்த எல் ஐ சியின் (LIC) ஜீவன் சாந்தி திட்டம் (Jeevan Shanti Scheme).

இந்த திட்டத்தில் நீங்கள் மொத்த தொகையை முதலீடு (Investment) செய்யலாம். இதில் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம். உடனடியாக பென்ஷன் பெறுதல் அல்லது 5, 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தை பெறுதல் என பலவகை முதலீட்டு திட்டங்கள் உள்ளது .  5, 10, 15 அல்லது 20 வருடங்கள் கழித்து பென்ஷன் பெரும் திட்டங்களில், அதற்கேற்ப உங்கள் பென்ஷன் தொகை அதிகமாக இருக்கும். 
இந்த திட்டத்தில் உங்களுக்கு 45 வயது என்ற நிலையில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், உங்களுக்கு ஆண்டுக்கு 74,300 ஓய்வூதியம் கிடைக்கும்.

எல்.ஐ.சி ஜீவன் சாந்தி திட்டத்தை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம். எல்.ஐ.சியின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். இதில் பாலிஸி எடுத்த நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலன்கள் கிடைக்கும்.

எல்.ஐ.சியின் இந்த பாலிஸியை எந்தவொரு இந்திய குடிமகனும் வாங்கலாம். இந்த பாலிஸியை  30 வயதுக்கு மேற்பட்டது மற்றும் 85 வயதுக்குக் குறைவாக உள்ள எவரும் எடுக்கலாம். இந்த பாலிசியின் அடிப்படையில்  நீங்கள் கடனையும் பெறலாம். பாலிசி தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் 3 மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்யலாம், இதற்கு எந்த மருத்துவ ஆவணமும் தேவையில்லை.

ALSO READ | IPL 2021 ரசிகர்களுக்கு Good News! Reliance Jio கொண்டுவந்துள்ளது அசத்தல் திட்டங்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News