SBI வாடிக்கையாளரா நீங்கள்? இந்த 10 சேவைகளை மொபைலில் இலவசமாக பெறலாம்!
எஸ்பிஐ Quick - MISSED CALL BANKING மூலம், உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி-ஸ்டேட்மென்ட் போன்ற பல வகையான சேவைகளை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைலில் இலவசமாக சில வங்கி சேவைகளை வழங்குகிறது. எஸ்பிஐ Quick - MISSED CALL BANKING மூலம், உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி-ஸ்டேட்மென்ட் போன்ற பல வகையான சேவைகளை பெறும் வகையில் எஸ்பிஐ வழிவகை செய்துள்ளது. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிக எளிமையாக மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமோ அல்லது மெசேஜ் அனுப்புவதன் மூலமோ நீங்கள் வீட்டிலிருந்தபடியே எஸ்பிஐ வங்கியின் சில சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐஓஎஸ் அல்லது பிளாக்பெர்ரி போன்ற மொபைல்களை பயன்படுத்துபவர்கள் வங்கியின் இந்த எஸ்பிஐ குயிக் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் இலவசமாகப் பெறக்கூடிய 10 சேவைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | NRI ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு செயல்முறை இதோ
1) SBI Balance Enquiry:
கணக்கில் கடைசியாக க்ளியர் பேலன்சை பெற, வாடிக்கையாளர்கள் 919223766666 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது 'BAL' என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
2) SBI Mini Statement:
கடந்த 5 டிரான்ஸாக்ஷன்களின் மினி ஸ்டேட்மென்ட்டைப் பெற, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 919223766666 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது 'MSTMT' என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
3) SBI Cheque Book Request Acknowledgement:
917208933145 என்ற எண்ணுக்கு "CHQREQ" என்று டைப் செய்து மெசேஜ் அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
4) SBI Cheque Book Request:
917208933145 என்கிற எண்ணுக்கு "CHQREQ" என்று டைப் செய்து மெசேஜ் அனுப்பியதும் உங்களுக்கான தகவல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
5) SBI E-Statement of last 6 months:
917208933145 என்ற எண்ணுக்கு 'ESTMT' என டைப் செய்து மெசேஜ் அனுப்பியதும் வங்கி சேமிப்பு கணக்கின் கடந்த 6 மாதங்களுக்கான இ-ஸ்டேட்மென்ட் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் பிடிஎஃப் . வடிவில் அனுப்பி வைக்கப்படும்.
6) SBI Education Loan Interest Certificate:
நிதியாண்டிற்கான உங்கள் கல்விக் கடனுக்கான வட்டிச் சான்றிதழைப் பார்க்க வேண்டுமானால் 917208933145 என்ற எண்ணுக்கு 'ELI' என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.
7) SBI Home Loan Interest Certificate:
நிதியாண்டிற்கான உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டிச் சான்றிதழைப் பார்க்க வேண்டுமானால் 917208933145 என்ற எண்ணுக்கு 'HLI' என டைப் செய்து மெசேஜ் அனுப்பவேண்டும்.
8) SBI ENROLL Positive Pay System (PPS):
பிபிஎஸ்-ஐப் பயன்படுத்த வேண்டுமானால் முன்னரே எஸ்பிஐ வங்கி கிளையில் பதிவு செய்திருக்க வேண்டும், அதன்பின்னரே மொபைல் சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியும்.
9) SBI Full list of Services:
917208933145 என்கிற எண்ணுக்கு “HELP” என டைப் செய்து மெசேஜ் செய்வதன் மூலம் சேவைகளின் முழு பட்டியலையும் நீங்கள் பார்க்க்கலாம்.
10) SBI Language Change (Hindi/English):
ஹிந்தி மொழிக்கு இந்தி & ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கு 917208933148 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க | ஆதார் அட்டையை தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம், உடனே இதை செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ