எஸ்பிஐ வங்கியின் டிரான்ஸாக்ஷன் விதிகளில் மாற்றம்!
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் ஒவ்வொரு கிளைகளிலும் பணப் பரிமாற்றத்திற்கான உடனடி கட்டண சேவையின் வரம்பை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. வங்கியின் அறிவிப்புப்படி, பிப்ரவரி 1, 2022 முதல், ஐம்எம்பிஎஸ் டிரான்ஸாக்ஷன்களுக்கு புதிய ஸ்லாப் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்லாப் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு, ஐஎம்பிஎஸ் மூலம் பணம் அனுப்புவதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி ஆகும். ஐஎம்பிஎஸ் என்பது வங்கிகளால் வழங்கப்படும் கட்டணச் சேவையாகும், இதன் மூலம் வங்கிகளுக்கு இடையே நிதி பரிமாற்றம் நடக்கிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: LTC விதிகளில் முக்கிய மாற்றம், புதிய விதிகள் இதோ
ஐஎம்பிஎஸ் என்பது உடனடி மொபைல் கட்டணச் சேவையாகும், இதன் மூலம் எந்த ஒரு கணக்குதாரருக்கும் எங்கும், எந்த நேரத்திலும் பணத்தை அனுப்ப முடியும். இதில் பணம் அனுப்பும் நேரத்திற்கு எந்த தடையும் இல்லை, இந்த சிறப்புச் சேவையின் கீழ், 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் எந்த நேரத்திலும் ஐஎம்பிஎஸ் மூலம் சில நொடிகளில் பணத்தைப் டிரான்ஸாக்ஷன் செய்யலாம். இந்தியாவில் ஆன்லைன் மூலம் எங்கும், எந்த நேரத்திலும் பணத்தை அனுப்பலாம், ஆனால் பணம் அனுப்பும் முறைகள் தான் வேறுபட்டவை. ஆன்லைன் வங்கியிலிருந்து பணத்தை மாற்ற "ஐஎம்பிஎஸ், என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்" போன்ற மூன்று வழிகள் உள்ளன.
இது நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் கையாளப்படுகிறது, இதில் நிதியை மாற்றுவதன் மூலம் பணம் உடனடியாக மாற்றப்படுகிறது. ஐஎம்பிஎஸ்ஆண்டு முழுவதும் 24×7 கிடைக்கும், ஆனால் என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ்-ல் இந்த வசதி இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் ஐஎம்பிஎஸ் சேவை தொடர்பாக அக்டோபர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, முன்பு ரூ.2 லட்சம் வரை பரிவர்த்தனை செய்த வாடிக்கையாளர்கள், இப்போது வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் எஸ்பிஐ அதன் வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது, அதனை YONO செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் மறுப்பா, இந்தியன் வங்கிக்கு DCW நோட்டீஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR