EPF Account Transfer Latest Update: சமீபத்தில் பணியிடம் மாறி புதிய நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஊழியர்கள், தங்கள் EPF கணக்கை பழையதில் இருந்து புதிய முதலாளிக்கு எளிதாக மாற்றலாம். EPF என்பது நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் தங்களுக்குப் பலனளிக்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்பதை ஊழியர்கள் கவனிக்க வேண்டும். பொதுவாக, வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு ஓய்வூதியம் சார்ந்த சேமிப்பு அல்லது முதலீட்டுக் கணக்காகக் கருதப்படுகிறது. மேலும் இது ஊழியர் மற்றும் பணி அளிப்போரின் பங்களிப்புகளாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், PF கணக்கை ஆன்லைனில் மாற்ற, பழைய மற்றும் புதிய பயணியிடத்தில், ஒருங்கிணைந்த உறுப்பினர் இ-சேவா போர்டல் மூலம் பரிமாற்ற செயல்முறையைத் தொடங்க முடியும். இது அவ்வாறு இல்லையென்றால், பணியாளர்கள் படிவம் 13-ஐ பூர்த்தி செய்து தங்கள் மனிதவளத் துறையில் சமர்ப்பிக்கலாம்.


ஆன்லைனில் EPF கணக்கை எப்படி மாற்றுவது?


- முதலில், நீங்கள் அதிகாரப்பூர்வ உறுப்பினர் சேவா போர்ட்டலை https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/  பார்வையிட வேண்டும்.


- உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து, உள்நுழைய வேண்டும்.


- "Online Services" ஆப்ஷனை கிளிக் செய்து,"One Member- One EPF Account (Transfer Request" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


- இந்த கட்டத்தில், புதிய டேப்பிற்கு (Tab) செல்லும்படி அறிவுறுத்தப்படும். நீங்கள் பணத்தை மாற்ற விரும்பும் புதிய EPF கணக்கின் விவரங்களை அதில் நிரப்பவும். உங்களின் புதிய EPF கணக்கு எண்ணை உங்களின் சம்பள சீட்டில் அல்லது புதிய பணியமர்த்துபவர்களின் EPF அறிக்கையில் காணலாம்.


மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்


- இதற்குப் பிறகு, உங்கள் ஆன்லைன் பரிமாற்றத்தின் சான்றொப்பம் உங்கள் தற்போதைய பணியளிப்பவர் அல்லது முந்தைய பணியளிப்பவர் மூலம் செய்யப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விருப்பத்தை நிரப்புவதற்கு முன் அவர்களுடன் சரிபார்க்கவும்.


- இரு நிறுவனங்களின் UAN ஒரே மாதிரியாக இருந்தால், முந்தைய EPF கணக்கு எண்ணை உள்ளிடவும். அவை ஒரே மாதிரியாக இல்லாவிட்டால், பழைய பணியிடத்தின் UAN எண்ணை உள்ளிடவும்.


பின்னர் நீங்கள் "Get Deatils" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் PF கணக்கில் உள்ள தகவலைப் பார்ப்பீர்கள். பணம் மாற்றப்படும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.


- ஒரு முறை கடவுச்சொல்லை உருவாக்க, "Get OTP" என்பதைக் கிளிக் செய்யவும். தொடர்புடைய புலத உள்ளிட்டு கோரிக்கையைச் சரிபார்க்கவும்.


- முழு செயல்முறைக்குப் பிறகு, உங்கள் பரிமாற்றக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். நீங்கள் பரிமாற்றக் கோரிக்கையைச் சமர்ப்பித்த 10 நாட்களுக்குள், பணியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்திற்கு PF பரிமாற்றக் கோரிக்கையின் சுய சான்றளிக்கப்பட்ட நகலை வழங்க வேண்டும்.


- பொதுவாக, EPF கணக்கு பரிமாற்றம் முடிவடைய 30-45 நாட்கள் ஆகும். மேலும் பணியாளர்கள் EPFO போர்ட்டலில் கோரிக்கைகளின் முன்னேற்றத்தை ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கண்காணிக்க முடியும்.


மேலும் படிக்க | திருப்பதி: அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..! உடனே புக் பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ