LPG சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைப்பு; அதிர்ச்சியில் மக்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (Oil companies) சார்பில் வீடுகளுக்கு 14.2 Kg எடையிலும், ஓட்டல்கள் மற்றும் பிற வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 Kg எடையிலும், மலைப்பிரதேசங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 5 Kg எடையிலும் LPG சிலிண்டர்கள் (cooking gas cylinder) வினியோகம் செய்யப்பட்டுகின்றன.
ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானிய விலையில் பெறலாம். இதற்கான மானியத்தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 12 சிலிண்டர் ஒதுக்கீட்டுக்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை மானியம் (LPG Subsidy) இல்லாமல் தான் வாங்க முடியும். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் நிலவரத்துக்கு ஏற்ப மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.714 ஆகவும், மானியம் ரூ.174.72 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.569 ஆக இருந்தது. ஆனால், மானியம் கொடுக்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் கியாஸ் சிலிண்டரின் (LPG CYLINDER) விலை ரூ.606 முதல் ரூ.881 வரை வெவ்வேறு விலைகளில் இருந்தது. அப்போது வாடிக்கையாளர்களுக்கு மானியமாக ரூ.25.45 மற்றும் ரூ.23.95 என வெவ்வேறு தொகை செலுத்தப்பட்டது.
ALSO READ | இனி LPG சிலிண்டர் வெறும் ரூ.194-க்கு கிடைக்கும்.. முன்பதிவு செய்வது எப்படி?
இதற்கிடையில், சிலருக்கு சிலிண்டருக்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கடந்த மாதம் (டிசம்பர்) கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உள்ளது. ஆனால் இதற்கான மானியமாக ரூ.24.95 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் (bank account) செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி கணக்கை பரிசோதித்துவிட்டு, மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பது அறிந்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு சென்று வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மானியத்தொகையினால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தினந்தோறும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் படையெடுத்து வருவது கியாஸ் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கேட்டபோது, ‘பெட்ரோலிய அமைச்சகம் தான் மானியத்தொகையை நிர்ணயம் செய்து வருகிறது. அவர்கள் குறிப்பிடும் தொகையை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் வசூலிக்கின்றன’ என்றனர்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR