Business Idea For Women In Tamil : இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதை விட, கடந்த சில ஆண்டுகளாக சுய தொழில்கள்தான் அதிகரித்து வருகின்றன. காரணம், பலருக்கு ஒருவரிடம் சம்பளம் வாங்குவதை விட, தனது சொந்த நிறுவனத்தை வைத்து அதிலிருந்து வரும் வருமானத்தையே நம்புகின்றனர். இது ஒட்டுமொத்த இந்தியாவின் வருமானத்தையே உருவாக்குவதாக கருதப்படுகிறது. ‘தொழில்முனைவாேர்’ என்ற பெயரை கேட்கும் போது, பலருக்கு ஆண்கள்தான் நினைவிற்கு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை சுய தொழில் செய்யும் பெண்கள் மிகவும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, பெண்களும் நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருவதை பார்த்து வருகிறோம். இந்தியாவில், பெண்களுக்கு அதிக வருமானம் கொடுக்கும் சுய தாெழில்கள் என சிலவற்றை பொருளாதார நிபுணர்கள் எடுத்து முன்வைக்கின்றனர். அவை என்னென்ன? இங்கு பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SEO நிபுணர்:


ஆன்லைனில் ஒரு தொழில் தொடங்க விரும்பினால் அதற்கு உகந்ததது, SEO (Search Engine Optimization)ஆகும். பல துறைகளில் தற்போது பரவலாக உபயோகிக்கப்படும் டூல்க்ஸகளுள் ஒன்று இது. குறிப்பாக இந்தியாவில் இதற்கு மார்கெட் அதிகமாக ஆரம்பித்து விட்டது. வீட்டில் இருந்தே சுய தொழில் செய்ய விரும்புபவர்களும், ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களும் இந்த தொழிலை தொடங்கலாம். இதற்காக சில ஆயிரங்களை செலவு செய்தி சில கோர்ஸ்களை கற்றுக்கொண்டாலே போதுமானது.  இதற்கு, நல்ல இணைய வசதியுடன் ஒரு மடிக்கணினி அல்லது கணினி இருந்தாலே போதும். 


மொழி பெயர்ப்பாளர்:


ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க, பெரிய வாய்ப்பாக இருக்கிறது மொழி பெயர்ப்பு. இதற்கான சந்தை, உலகளவில், பெருகி வருகிறது. இதன் விளைவாக, நவீன சமுதாயத்தின் வேகமான வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு, பல மொழிகளில் சரளமாக பேசுவது அவசியமாகிறது. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்தவர்களுக்கு, இந்த துறை மிகவும் உபயோகரமாக உள்ளது. இந்த வேலையை ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். 


மேலும் படிக்க | SCSS Interest Rates : சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அறிவித்தது அரசு.... அதிக வட்டி கிடைக்குமா?


ஒப்பனை கலைஞர்:


ஒப்பைனைக்கு என்றுமே இந்தியாவில் பஞ்சமே இருக்காது. அதிலும், திரைத்துறையை தாண்டி இன்று பல்வேறு இடங்களில் ஒப்பனை கலைஞர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஒரு மணப்பெண் மேக்-அப்பிற்கு பல ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை சில பிரபல கலைஞர்கள் சார்ஜ் செய்கின்றனர். இதை கற்றுக்கொள்வதோடு மட்டுமன்றி நன்றாக பயிற்சியும் எடுத்துக்கொள்ள வேண்டும். சில மணி நேர வேலைக்கு, பல ஆயிரங்களில் இந்த தொழில் மூலம் சம்பாதிக்கலாம். 


ப்ளாகர்:


முன்னர், ப்ரிண்டாகி வந்த நாளிதழ்கள், மாத இதழ்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட வாசகர்கள் இருந்து வந்தனர். ஆனால் இன்று எது படிக்க வேண்டுமானாலும் அதை கூகுள் தேடுதளத்தில் ஒரு தட்டு தட்டினாலே போதும், எக்கச்சக்கமான தகவல்கள் வந்து குவிகின்றன. அதற்கு காரணம், அதிகரித்த ஆன்லை தளங்கள் என்று கூட சொல்லலாம். எனவே, பெண்கள் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை எழுத ஆரம்பித்தாலே போதும். கண்டிப்பாக பன்மடங்கு சம்பாதிக்கலாம். 


நிகழ்ச்சி மேலாளர்:


பெண்கள் பொதுவாக, ஒரு விஷயத்தை ஒழுங்காக அமைப்பதற்கு பெயர் போனவர்களாக இருக்கின்றனர். இந்த குணங்களைக் கொண்டிருப்பது அவர்களுக்கு ஒரு வணிகத்தைத் தொடங்க பெரும் உதவியாக இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு மல்டி டாஸ்கர்கள் தேவைப்படுவார்கள். பெண்கள் இயல்பாகவே ஒரு நேரத்தில் பல வேலைகளை செய்பவர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். பிறந்தநாள் விழா, கார்ப்பரேட் அல்லது சமூக நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு தனித்தனியே ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் போட்டோ எடுப்பவர்களை ஏற்பாடு செய்வது முதல், டி.ஜே, சமையல் கலைஞர்கள் வரை அனைவரையும் அவர்களே ஏற்பாடு செய்கின்றனர். இதிலிருந்து ஆயிரங்கள் என்ன, பல லட்சங்கள் வரை பெண்கள் சம்பாதிக்கலாம். 


(பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்:17% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள் வேலை, கூடுதல் விடுமுறைகள்.... ஒப்பந்தம் எட்டப்பட்டது!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ