ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டுமா..? ‘இந்த’ 4 டிப்ஸ்களை கடைபிடியுங்கள்..!

நம்மில் பலருக்கு வேலை செய்து சம்பாதிக்கும் பணம் மட்டும் போதாமல் இருக்கும். இதை தவிர்க்க ஆன்லைனில் வேறு எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்கலாம் என்று தோன்றும். அவர்களுக்கான டிப்ஸ்தான் இவை.   

Written by - Yuvashree | Last Updated : Aug 24, 2023, 04:54 PM IST
  • ஆன்லைனில் எளிய முறையில் பணம் சம்பாதிப்பது எப்படி..?
  • சில ஈசி டிப்ஸ்களை பின்பற்றி ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்.
  • இதில் லாபம் அதிகம் இருப்பது போலவே ஆபத்துகளும் இருக்கின்றன.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டுமா..? ‘இந்த’ 4 டிப்ஸ்களை கடைபிடியுங்கள்..!  title=

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா..?

நம்மில் பெரும்பாலோர் கூடுதலாக பணம் சம்பாதிக்க விரும்புகிறோம், வீட்டில் அதிகரிக்கும் செலவுகள், கடன் நிலுவை தொகை அல்லது வருங்கால திட்டம் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் ஒரு சில காரணங்களுக்காக வீட்டிலேயே தங்கி வேலை செய்பவராக அல்லது வேலைக்கு செல்லாதவராக இருந்தால் உங்களுக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 எளிதான மற்றும் லாபகரமான வழிகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா..? 

1.ஃப்ரீலான்ஸ் வேலை:

ஃப்ரீலான்ஸ் வேலை என்பது கிட்டத்தட்ட பகுதி நேர வேலை போன்றது. இது, நாள் கணக்கில் தொடரும் வேலையாக இருக்கலாம். அல்லது சில மணி நேரங்களிலேயே முடிந்து விடும் வேலையாக இருக்கலாம். இந்த வேலைக்காக நேரில், அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆன்லைனில் நம்பகமான நிறுவனங்கள் இது குறித்த பல அறிவிப்புகளை வெளியிடுகின்றன. அவற்றை நன்கு ஆராய்ந்த பிறகு அந்த வேலையை செய்து கொடுக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யலாம். டேட்டா சயின்ஸ், எழுதுதல், வீடியோ எடிட் செய்தல், டிசைன் செய்தல் போன்ற பணிகளில் நீங்கள் கை தேர்ந்தவராக இருந்தால் உங்களுக்கு ஆன்லைனில் பல ஃப்ரீலான்ஸ் பணிகள் கிடைக்கும். இதன் மூலம் சம்பாதிக்கும் பணம், உங்களது அன்றாட செலவுகளுக்கு போதாது என்றாலும் இதர செலவுகளை சமாளிக்க உதவும், 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்... இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு!!

2.கண்டண்ட் எழுதும் வேலை: 

ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை, சொற்பிழை மற்றும் இலக்கண பிழை இன்றி எழுதுபவராக இருந்தால் Content Writing உங்களுக்கான வேலை.  கண்டண்ட் எழுதுவதற்கான வேலைகள் ஆன்லைனில் அதிகமாக இருக்கின்றன. பல நிறுவனங்கள் இதற்கான வேலைகள் குறித்த அறிவிப்பினை அவ்வப்போது அவரவர் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவர். இதற்காக பல வேலை தேடும் தளங்களும் உள்ளன. அதன் மூலம் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். உணவு, டெக்னாலஜி, பயணக்கட்டுரைகள், ஒரு நிறுவனத்தின் பிராண்ட் என பல வகையில் கண்டண்ட் எழுதி சம்பாதிக்கலாம். 

3.வலைப்பதிவு: 

உங்களுக்கு எழுதுவது பிடித்த வேலை என்றால் கண்டிப்பாக Blogging-ஐ (வலைப்பதிவு) ட்ரை செய்து பார்க்கலாம். உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அந்த துறையில் நீங்கள் எழுத ஆரம்பிக்கலாம். Blog எழுதுவதற்கு என பல தளங்கள் இருக்கின்றன. இதில் சிலவற்றை நாம் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு சிலவற்றிற்கு நாம் சந்தா செலுத்தும் படி இருக்கும். கூகுள் விளம்பரங்கள் மற்றும் இதர விளம்பரங்கள் மூலம் ப்ளாக்ஸ்களில் சம்பாதிக்கலாம். இதிலிருந்து மட்டும் ஒரு சிலர் 15,000 ரூபாய் வரை மாதா மாதம் சம்பாதிக்கின்றனர். 

4.மொழிபெயர்ப்பு வேலைகள்: 

நீங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை அறிந்தவராக இருந்தால் மொழிபெயர்ப்பு வேலைகள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும். இதுதான் தற்போது ஆன்லைன் மார்கெட்டில் அதிகம் சம்பாதிக்கும் தொழிலாக இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், இதற்காக இருக்கும் வேலைகள் அளவிற்கு அந்த வேலைகள் செய்ய ஆட்கள் இல்லை. படத்திற்கு சப்டைட்டில் போடுவதில் இருந்து ஒரு முக்கிய ஆவணத்தை விளக்கும் வரை மொழிபெயர்ப்புக்கு அதிக அளவில் வேலைகள் உள்ளன. எவ்வளவு வார்த்தை மொழிப்பெயர்த்து கொடுக்கிறோமோ அதற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். இந்த வேலையையும் ஆன்லைனிலேயே செய்து தரலாம். 

மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News