Supreme Court Verdict on Adani Hindenburg Case Update in Tamil :அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது. அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதி நிலையை உண்மைக்கு புறம்பான வகையில் காட்டுவதாகவும் பங்கு சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாகவும் வெளியான அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த புகார்களின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையை செபியிடம் இருந்து எஸ்ஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் Securities and Exchange Board of India) மற்றும் அதானி குழுமத்திற்கு இந்த் தீர்ப்பு நிம்மதி அளித்துள்ளது. அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்தது செபிக்கும் ஆறுதலாக உள்ளது. ஏனெனில், செபி தனது விசாரணையை முறையாக நடத்துவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, செபி தனது விசாரணையைத் தொடரும்.



ஒழுங்குமுறை ஆட்சியின் களத்திற்குள் நீதிமன்றம் நுழைய முடியாது என்று கூறிய தீர்ப்பு, ஹிண்டன்பர்க் அறிக்கை அல்லது அது போன்ற எதுவும் தனி விசாரணைக்கு உத்தரவிடுவதற்கான அடிப்படையாக மாற முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. செபி சட்டப்படி விசாரணையைத் தொடரும் என்றும், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறும் உச்ச நீதிமன்றம் செபிக்கு உத்தரவிட்டது.


தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அதானி நிறுவனம் தொடர்பான நான்கு மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்தது. வழக்கறிஞர்கள் விஷால் திவாரி, எம்.எல்.சர்மா, காங்கிரஸ் தலைவர்கள் ஜெயா தாக்கூர், அனாமிகா ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


மேலும் படிக்க |  வேலை செய்தா, இந்த நிறுவனத்தில் தான் செய்யனும்! ஊழியர்களை முதலாளியாக்கும் Ideas2IT


செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் நுழைவதற்கான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. எஃப்பிஐ மற்றும் எல்ஓடிஆர் விதிமுறைகள் மீதான அதன் திருத்தங்களைத் திரும்பப் பெறுமாறு செபியை வழிநடத்த சரியான காரணங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 22 விஷயங்களில், 20 விஷயங்களில் செபி விசாரணையை முடித்துள்ளது. மற்ற இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாக தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  


செபி விசாரணையில் சந்தேகம் ஏற்படும் வகையில் OCCPR இன் அறிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. OCCPR அறிக்கையின் மீதான நம்பிக்கை நிராகரிக்கப்பட்டது மற்றும் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் மூன்றாம் தரப்பு நிறுவன அறிக்கையை நம்பியிருப்பதை ஆதாரமாக நம்ப முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | முடங்கிய UPI IDகள்! இனி யாரெல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாது தெரியுமா?


செபி-அதானி-ஹிண்டன்பர்க் 
முன்னதாக, அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் செபி, அதானி குழுமத்தின் ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் சந்தை கையாளுதல்களுக்கு துணைபோவதாக மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தை நியாயமாக விசாரிக்குமாறு செபியை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.  


இந்த வழக்கின் விசாரணையின் போது, செபி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்தியாவில் உள்ள விஷயங்கள் மற்றும் கொள்கைகளை பாதிக்கும் வகையில் இந்தியாவுக்கு வெளியே கட்டுக்கதைகளை உருவாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது" என்று கூறினார்.


அதானி குழுமம் மோசடியான பரிவர்த்தனைகள் மற்றும் பங்கு-விலை கையாளுதல் என்று குற்றம் சாட்டி, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால், இவை உண்மையானவை அல்ல என்று கூறிய அதானி குழுமம் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.


அதானி குழுமம் தனது சொந்த பங்குகளை ரகசியமாக வாங்கி பங்குச் சந்தையில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் கூறுகிறது. 


மேலும் படிக்க | 100 பில்லியனைத் தாண்டிய UPI ​பரிவர்த்தனைகள்! டாப் கியரில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ