சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வழக்கமாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இதனையொட்டி தமிழக அரசு மாநிலத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும். அதில், கரும்பு, சர்க்கரை, பச்சரிசி அடங்கிய தொகுப்பு இருக்கும். மேலும் அதனுடன் ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த v. பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் சரியான சமயத்தில் சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக, ரேஷன் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்குக் டோக்கன் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். 


இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகை அதிகரிக்கும் என்ற செய்தி, மக்களுக்கு கரும்பு தின்ன கூலியாக இருக்கும் என்று சொல்லலாம். தமிழ் மாதத்தில் தை முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமை தோகை பெற மேலும் 7.35 லட்சம் பேர் தேர்வு? லேட்டஸ்ட் அப்டேட்


சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன், அரசு அதிகாரிகளுடன் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000க்கு பதிலாக ரூ.2000 வழங்கவது தொடர்பாக  பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


2024ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு (TN Government) எடுக்கும் முடிவு பொதுத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு தற்போது பெண்களுக்கு மாத மாதம் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசின் இந்த பரிசீலனை முக்கியத்துவம் பெறுகிறது. 


மேலும் படிக்க | களைகட்டிய பாஜகவின் கொண்டாட்டங்கள்! மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி


2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகளில் குடும்ப தலைவிகளுக்கு ஆறுதல் அளிக்கும் முக்கிய அறிவிப்பை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. 


தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் போன்ற திட்டங்கள் உடனடியாக கொண்டு வரப்பட்டாலும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் தான் அமல்படுத்தப்பட்டது.


கடந்த தேர்தல் பரப்புரையில் சொன்ன அறிவிப்பு நல்ல வேலை செய்திருக்கிறது என்று தேர்தல் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அடுத்த ஆண்டு, அதாவது 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இதே திட்டத்தின் பலனை மேலும் அறுவடை செய்ய ஆளும் கட்சி திட்டமிடுவதாக தெரிகிறது. 


மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்? சூப்பர் ஐடியா செய்யும் தமிழ்நாடு அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ