Licensing Norms On Import of Laptops & Computers: லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இறக்குமதிக்கான உரிம விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இப்போது இந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்பவர்களுக்கு ஆன்லைன் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளது.எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பொருட்கள் தொடர்பாக மத்திய அரசு தற்போது முக்கிய முடிவை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட கணினி, மடிக்கணினி மற்றும் டேப்லெட்களை இறக்குமதி செய்ய, மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் (USFF) கணினிகள் மற்றும் சர்வர்கள் இறக்குமதிக்கான கட்டுபாடுகள் அமலுக்கு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் (DGFT) சந்தோஷ் குமார் சாரங்கி வியாழக்கிழமை இது குறித்து கூறுகையில், புதிய உரிமம் அல்லது ஒப்புதல் முறையின் நோக்கம் முக்கியமாக இந்த தயாரிப்புகளின் இறக்குமதியைக் கண்காணிப்பதாகும். இறக்குமதி  நம்பகமான மூலத்திலிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.


இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான மக்களின் கவலைகளை மனதில் கொண்டு, கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இறக்குமதியாளர்களுக்கு 'எண்ட்-டு-எண்ட்' ஆன்லைன் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக திரு. சாரங்கி மேலும் கூறினார். இந்த அமைப்பு இறக்குமதியாளர்களுக்கு இருந்த இடத்தில் இருந்தே தொடர்பு விவரங்களை நிரப்புவதற்கான வசதியை வழங்கும் என்று சாரங்கி கூறினார். மடிக்கணினிகள், தனிப்பட்ட கணினிகள் (டேப்லெட் கணினிகள் உட்பட), மைக்ரோ கம்ப்யூட்டர்கள், பெரிய அல்லது மெயின்பிரேம் கணினிகள் மற்றும் சில தரவு செயலாக்க இயந்திரங்களுக்கு புதிய உரிமம் வழங்கும் முறை பொருந்தும்.


அரசின் இந்த முடிவு ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது


அரசின் இந்த அறிவிப்பு முக்கியமானது, ஏனெனில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை குறைக்கவும், நவம்பர் 1 முதல் இறக்குமதியாளர்கள் இந்த பொருட்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற வேண்டும் என்று ஆகஸ்ட் 4 அன்று அரசாங்கம் அறிவித்தது.


உரிமத்திற்கு என்ன செய்ய வேண்டும்


இறக்குமதி உரிமம் பெற இறக்குமதியாளர் கணினியில் விண்ணப்பிக்கலாம் என்று DGFT தெரிவித்துள்ளது. இறக்குமதியின் அளவு, விலை அல்லது எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருக்காது. உரிமத்தை பெறுவதற்கான புதிய அமைப்பைத் தயாரிப்பதில் வருவாய்த் துறையும் ஈடுபட்டுள்ளது,  விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்ய சுமார் 10 நிமிடங்கள் ஆகும். விண்னப்ப செயல்முறை நிறைவடைந்தது, உரிமம் தானாகவே வழங்கப்படும்.


மேலும் படிக்க | தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!!


உரிமம் யாருக்கெல்லாம் கிடைக்காது


சாரங்கி கூறுகையில், 'மறுக்கப்பட்ட அடையாள பட்டியலில்' சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு உரிமம் கிடைக்காது. ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன பொருட்கள் (EPCG) போன்ற திட்டங்களின் பலன்களைப் பெறுவதன் மூலம் ஏற்றுமதிக் விதிகளை நிறைவேற்றாத அல்லது தவறிய நிறுவனங்களை இந்தப் பட்டியலில் உள்ளடக்கியது. அல்லது டிஆர்ஐ (வருவாய் புலனாய்வு இயக்குநரகம்) வழக்குகள் நிலுவையில் உள்ள நிறுவனங்களுக்கு உரிமம் கிடைக்காது. பயன்படுத்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பும்  நிறுவனங்களும் இந்த உரிமத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படாது.


நம்பகமான டிஜிட்டல் அமைப்பு தேவை


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன்  இவை அனைத்தும் நமக்குத் தேவையான தரவு மற்றும் தகவல்களை வழங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று கூறினார்.


மேலும் படிக்க | பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ