பெரும்பாலான மக்களுக்கு அவ்வப்போது பண தேவை ஏற்படுகின்றது. சுப செலவுகள், அவசர தேவைகள், மருத்துவ செலவுகள், பயணங்கள், குழந்தைகள் படிப்பு, திருமணம் என பண தேவைக்கு பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் மக்கள் பெரும்பாலும் பிறரிடம் கடன் வாங்குகிறார்கள். ஆனால், சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதும், அதன் காரணமாக கடன் வலையில் சிக்குவதும் அதிகம் நடக்கின்றது. இதற்கு பதிலாக முறையான இடங்களிலிருந்து கடன் பெற்றால், அதிக வட்டியும் இல்லாமல் கடனை திரும்ப அடைக்கலாம். இன்றைய காலகட்டத்தில், அவசரகாலத்தில் கடன் வழங்க பல இடங்கள், பல தேர்வுகள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து மக்கள் எளிதாக குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம். குறைந்த வட்டியில் கடன் அளிக்கும் அப்படிப்பட்ட்ட தேர்வுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிநபர் கடன் 


அவசர காலத்தில் நிதியைப் பெற தனிநபர் கடன்கள் (Personal Loan) எளிதான வழி. உங்கள் கிரெடிட் ப்ரொஃபைல் நன்றாக இருந்தால், எந்த வங்கியும் உங்களுக்கு எளிதாக தனிநபர் கடனை வழங்கும். இங்கே வட்டி விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதே அளவு குறைவாக இருக்கும்.


மியூசுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளின் மீதான கடன்


மியூசுவல் ஃபண்டுகள் (Mutual Funds) மற்றும் பங்குகளை வைத்தும் எளிதாக கடன் பெறலாம். பெரும்பாலான வங்கிகள் பங்குகள் மற்றும் மியூசுவல் ஃபண்டுகளுக்கு நிகராக உங்கள் பங்குகளின் தற்போதைய மதிப்பில் 50 சதவீதம் வரை கடன்களை வழங்குகின்றன. பங்குகள் மற்றும் மியூசுவல் ஃபண்டுகளின் அடமானத்தின் மீது எடுக்கப்பட்ட கடன் பாதுகாப்பானது. எனவே வட்டி குறைவாக செலுத்தினால் போதும். 


சொத்து மீதான கடன்


அதிக பணம் தேவை என்றால் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது நல்லது. இதில், உங்கள் சொத்தின் மதிப்பில் 60 முதல் 70 சதவீதம் வரை எளிதாக கடன் பெறலாம். அதன் வட்டி விகிதமும் மிகவும் குறைவு.


மேலும் படிக்க | NPS விதிகளில் பெரிய மாற்றம்: இனி தொகையை எடுக்க, வெளியேற இதை காண்டிப்பாக செய்ய வேண்டும்


தங்க கடன்


தங்கக் கடன் (Gold Loan) ஒரு நல்ல வழி. மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் விரைவாகக் கிடைக்கும் என்பது இதில் உள்ள மிகப்பெரிய நன்மை. உங்களுக்கு மிகக் குறைந்த பணம் தேவைப்பட்டால், தங்கக் கடன் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதில், உங்கள் தங்கத்தின் மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் கிடைக்கும்.


ஃபிக்ஸ்ட் டெபாசிட் 


ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) மீதான கடன் என்பது ஒரு வகை ஓவர் டிராஃப்ட் வசதியாகும். இது அனைத்திலும் மிக மலிவான கடன் விருப்பமாகும். FD மூலம் கடனுக்கான செலவு 0.50- 2.00 சதவீதம் வரை இருக்கும். இதில், FD மதிப்பில் 70 முதல் 95 சதவீதம் வரை கடன் கிடைக்கும்.


கூடுதல் தகவல்


வங்கிகளில் பணத்தை செபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி நல்ல செய்தியை அளித்துள்ளது. கூடிய விரைவில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கலாம். இதற்கான ஒரு அறிகுறியை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்திற்கு அதிக வட்டியை பெற வேண்டும் என்ற கருத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. பெரிய தனியார் மற்றும் அரசுத் துறை வங்கிகள் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு 2.70 சதவீதம் முதல் நான்கு சதவீதம் வரை வட்டி தருகின்றன. வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையில் சேமிப்புக் கணக்குகளின் பங்கு மூன்றில் ஒரு பங்காகும். இருப்பினும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புக் கணக்குகளுக்கு (Savings Account) மிகக் குறைந்த வட்டியையே வழங்குகின்றன.


மேலும் படிக்க | தினமும் 7 ரூபாய் சேமித்தால் போதும்... முதுமையில் மகிழ்ச்சியாக வாழலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ