புதுடெல்லி: Rupay Card பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது ரூபே கார்டுகள் உள்ளவர்களுக்கு, பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (National Payment Corporation of India (NPCI)) அறிமுகப்படுத்திய இந்த அட்டையின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், NPCIஐ ஒரு பெரிய பிராண்டாக நிறுவவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக Rupay Card இந்திய தயாரிப்பாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் ஐபிஏ ஆகியவற்றின் முயற்சியால் உருவாக்கப்பட்ட Rupay Card, நாட்டில் கட்டணங்களை செலுத்துவதற்கான சிறப்பான அட்டையாகும்.  

 

ஆடைகள் வாங்குவது, சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளைப் பெறுவது, ஸ்மார்ட்போன்கள், உணவு, பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்க Rupay Card பயன்படுத்தலாம்.  

 

1. வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள்: வீட்டை சுத்தம் செய்ய உங்களால் முடியவில்லையா? ஆனால், இந்த தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும் சேவைகளுக்கு Rupay Cardஐ பயன்படுத்டி கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். 

2. ஹெல்த்கேர்: நீங்கள் அப்பல்லோ மருந்தக கடைகளில் தேவையானவற்றை வாங்கும்போது, Rupay Card மூலம் பணம் செலுத்தி 15% தள்ளுபடி பெறலாம்.  

3. அமேசான் ஷாப்பிங்: இந்த பண்டிகை காலத்தில் அமேசானிலிருந்து ஷாப்பிங் செய்யும்போது, #RuPayFestiveCarnival திட்டத்தைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். செய்யலாம், Great Indian Festivalஇல் http://Amazon.in இல் உங்கள் ரூபே டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சலுகைகளைப் பெறலாம்.  குறைந்தபட்சம் 1000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். அதிகபட்சமாக 250 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.

4. மளிகை கடை: நீங்கள் மளிகை கடைகளில் பொருட்களை வாங்கும்போது, ரூபே அட்டை மூலம் பொருட்கள் வாங்கினால் லாபம் கிடைக்கும். ரிலையன்ஸ் கடைகளில் 2000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு பொருட்களை வாங்கினால் 5 சதவீத தள்ளுபடி கிடைக்கும். 

5. ZEE5 உறுப்பினர்: நீங்கள் ZEE5 உறுப்பினராக இருந்தால், இந்த பண்டிகை காலத்தை ரூபே கார்டுடன் பட்டாசு கிளப்பலாம். உங்கள் RuPay அட்டையைப் பயன்படுத்தி 6 மாதங்களில் 20% தள்ளுபடி பெறுங்கள். ZEE5 இல் 12 மாதம் சந்தா செலுத்தாமல் உறுப்பினர் ஆகலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR