மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களில் உடனடி கவனம் தேவைப்படும் காயங்களைக் கவனிக்க விஞ்ஞானிகள் ஸ்ப்ரே பாண்டேஜ்களை கண்டறிந்துள்ளனர். அறிவியல் புனைகதை திரைப்படங்களில் பேசுவதைக் கேட்பதுபோல் இருக்கிறதா?
ஒரு புதிய ஆய்வில், விஞ்ஞானிகள் “எலக்ட்ரோ ஸ்பின்னிங்”எனப்படும் ஒரு நுட்பத்தை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மெல்லிய அடுக்கு இழைகளைக் உருவாக்கினார்கள். அவை சேதமடைந்த தோலில் தெளிக்கப்பட்டன. இதை சரியாக புரிந்துக் கொள்வதற்கு உதாரணமாக, ஒரு மேற்பரப்பில் பூச்சு பூசுவதைச் சொல்லலாம். நகங்களில் வண்ணப்பூட்டு பூசுவது, பெயிண்ட் அடிப்பது ஆகியவற்றையும் மனதில் கொண்டால் ஸ்ப்ரே பாண்டேஜ் என்பதை சரியாக புரிந்துக் கொள்ள முடியும்.
"மருந்துகள் வழங்கும் இழைகளை நேரடியாக காயமடைந்த இடத்திற்கு செலுத்தி காயங்கள் மேலும் சேதமடையாமல் பாதுகாக்கும் முயற்சியின் முதல் படி இது" என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வின் ஆசிரியரான லேன் ஹஸ்டனின் கூறுவதாக இன்டிபென்டன்ட் (Independent ) பத்திரிகை தெரிவித்துள்ளது.
Journal of Vacuum Science and Technology B என்ற பத்திரிகையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது. காயங்களை மறைக்க இந்த வழிமுறையைப் பயன்படுத்தலாம், அதன்பிறகு சிகிச்சையைத் தொடரலாம் என்று ஆய்வை முன்னெடுத்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆச்சரியப்படுத்தும் நுட்பமான தொழில்நுட்பம் இது. பல்வேறு துறைகளிலும் பல தயாரிப்புகளை மடிக்கவும், வடிகட்டவும் தொழில்களில் எலக்ட்ரோ ஸ்பின்னிங் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, அதிக வோல்டேஜ் கொண்ட மின்சாரம் மனித சருமத்தை சேதப்படுத்தும். ஆனால் விஞ்ஞானிகள் ஒரு சிறிய மின்சார புலத்துடன் ஒரு சாதனத்தை உருவாக்கி இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். ஆய்வில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, இந்த சோதனை செய்யப்பட்ட போது, மனிதர்களின் சருமத்தில் தெளிக்கப்படும் ஸ்ப்ரே-ஆன் –பேண்டேஜ், வழக்கமான பேண்டேஜ்கள் செய்யும் வேலையை செய்தது.
இந்த புதிய கண்டுபிடிப்புக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.மேற்பரப்பில் இழைகளை வழங்க காற்று பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சியில் முதல் கட்டமாக இந்த ஸ்ப்ரே-பேண்டேஜ்களை, பன்றிகள் மற்றும் “கையுறை போட்ட மனித கையில்”பரிசோதிக்கப்பட்டது,
பேண்டேஜ்களுக்கான சந்தையின் தற்போதைய மதிப்பீடு சுமார் 5.5 பில்லியன் டாலர்கள் ஆகும், இது அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஸ்ப்ரே பேண்டேஜ், கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தொழில்நுட்பம் உதவும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக கூறுகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR