துபாய்:  ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளம் நிறைந்த வளைகுடா நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதரத்திற்காக எண்ணெய் என்ற தனது இயற்கை மூலாதாரத்தை நம்புவதை குறைக்கவும் முயல்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகம் பொருளாதாரத்தை மேபடுத்தும் வகையில் 'க்ரீன் விசா' (Green Visa) என்ற புதிய வகை விசாவை அறிவித்துள்ளது. இந்த விசாவினால் இந்தியாவில் இருந்து சென்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்பவர்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய விசாவை அறிவித்தது, வெளிநாட்டவர்கள் ஒரு முதலாளியால் நிதியுதவி செய்யப்படாமல் அங்கு வேலைக்கு சேரமுடியும். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. அதற்காக க்ரீன் விசா என்ற புதிய விசா வகையை யு.ஏ.இ அறிமுகப்படுத்தியுள்ளது.


ALSO READ | கசிந்தது திட்டம்! அதிர்ந்தது அரசக்குடும்பம்!


குடியிருப்பு தேவைகளை தளர்த்தாமல், நாட்டில் வேலை செய்ய இந்த புதிய வகை விசா மூலம் யு.ஏ.இ அனுமதிக்கிறது. எண்ணெய் வளம் நிறைந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு பொதுவாக அவர்களின் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய வரையறுக்கப்பட்ட விசாக்கள் (limited visas tied to their employment) தான் வழங்கப்படுகின்றன.


எனவே, அங்கு நீண்ட கால குடியுரிமை பெறுவது கடினம். ஆனால் புதிய "கிரீன் விசா" வைத்திருப்பவர்கள் நிறுவன ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை செய்ய முடியும், அதோடு க்ரீன் விசா வைத்திருப்பவர்களின் பெற்றோர் மற்றும் மேலும் 25 வயது வரையிலான குழந்தைகளும் யு.ஏ.இயில் தங்கலாம்.  


"மிகவும் திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர், மற்றும் விதிவிலக்கான மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு கொடுக்கப்படும் விசா, க்ரீன் விசா" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் தானி அல்-ஜியுடி (Thani al-Zeyoudi) தெரிவித்தார். 


ALSO READ | 600 தலீபான்கள் கொலை, 1000 பேர் சரண்! பஞ்ச்ஷீர் மாகாண மோதல்!


ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளம் நிறைந்த வளைகுடா நாடுகள் பெருகிய முறையில் தங்கள் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தவும் எண்ணெயை நம்புவதை குறைக்கவும் முயல்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் சுற்றுலா மற்றும் வணிகங்களையும் பாதித்துள்ளது, சமீபத்திய ஆண்டுகளில் எண்ணெய் விலை குறைந்து வருவதால் அந்நாட்டின் அதன் பொருளாதாரம் சரிவைக் கண்டுள்ளது.


கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளில் வெளிநாட்டவர் தொடர்பான மாற்றங்கள் பற்றிய முக்கியத் தகவல்கள்:
2019 இல், ஐக்கிய அரபு அமீரகம் 10 வருட "கோல்டன் விசா" ஐ பணக்கார தனிநபர்கள் மற்றும் மிகவும் திறமையான தொழிலாளர்களை ஈர்க்க அறிமுகப்படுத்தியது. இதுதான் வளைகுடா நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மாறுபட்ட முதல் விசா திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகளிலும் இதே போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.


READ ALSO | தலிபான்களின் கூட்டாளி சீனா தான்!


800,000 ரியால்கள் ($ 213,000) கட்டணம் செலுத்தினால் நிரந்தரமாக நாட்டில் வசிக்கலாம் என்றும், ஒரு வருட புதுப்பிக்கத்தக்க வசிப்பிடத்திற்கு 100,000 ரியால்கள் கட்டணம் செலுத்தலாம் என்றும் ரியாத் ஜூன் 2019 இல் ரியாத் அறிவித்தது. அதோடு, சவுதி நாட்டு குடிமக்களின் ஸ்பான்சர் இல்லாமல் வெளிநாட்டவர்கள் வியாபாரம் செய்ய மற்றும் சொத்து வாங்கவும் அனுமதிக்கப்பட்டது.  


தனது சொத்து சந்தையை வெளிநாட்டினருக்கு திறந்த தோஹா, வீடு அல்லது கடைகளை வாங்குவோருக்கு நீண்ட கால அல்லது நிரந்தர வதிவிட அனுமதியும் கொடுத்தது.  


அண்டை நாடான சவுதி அரேபியாவுக்குப் பிறகு அரபு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 10 மில்லியன் மக்கள்தொகையில் 90 சதவிகிதம் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | பதவியை ராஜினாமா செய்யப்போகிறாரா ஜப்பான் பிரதமர்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR