ஆதார் அட்டை இந்தியர்களுக்கு ஒரு முக்கியமான ஆவணம், இது இல்லாமல் பல அரசு பணி மட்டுமல்ல வங்கி, தனியார் துறை என எந்த வித பணியையும் நிறைவு செய்ய முடியாது. ஆதார் அட்டையில் பழைய தகவல்கள் ஏதும் இருந்து, அது அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் உங்களுக்கு சிக்கல்கள் படலாம். இது தவிர, சமீபத்திய தகவல்களுடன் ஆதார் புதுப்பிக்கப்படாவிட்டால் மோசடிக்கான வாய்ப்பும் அதிகரிக்கக்கூடும். இதனை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை புதுப்பிக்க மத்திய அரசு கூறியிருந்தது. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை UIDAI வழங்குகிறது. உங்களிடம் 10 வருட ஆதார் கார்டு இருந்தால் உடனே இந்த வேலையை செய்ய வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் எப்போது வரை ஆதாரை இலவசமாக புதுப்பிக்க முடியும்?


10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை புதுப்பிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. உங்களின் 10 வருட ஆதார் அட்டையைப் புதுப்பிக்க விரும்பினால், UIDAI இணையதளம் அல்லது ஆதார் மையத்த்திற்கு செல்வதன் மூலம் இதைச் செய்ய வேண்டும். இதற்காக உங்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 14ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஆதாரை எங்கே புதுப்பிக்க வேண்டும்?


ஆதாரை இரண்டு வழிகளில் புதுப்பிக்கலாம். இதில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளும் அடங்கும். நீங்கள் ஆன்லைனில் பல பணிகளை முடிக்க முடியாது, அதற்கு நீங்கள் ஆதார் மையம் அல்லது CSC மையத்திற்கு செல்ல வேண்டும். இருப்பினும், நீங்கள் விரும்பினால், ஆன்லைனில் சந்திப்பை பதிவு செய்யலாம், இதனால் நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆதார் அட்டை புதுப்பிப்புக்கான சந்திப்பை முன்பதிவு செய்யலாம்.


இலவசமாக புதுப்பிக்கப்படும் தகவல்கள்


ஆதாரில் உள்ள சில தகவல்களை புதுப்பிப்பதற்கு UIDAI கட்டணம் வசூலிக்கிறது. இருப்பினும், டிசம்பர் 14, 2023 வரை இவற்றைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் இல்லை. முன்பு எந்தெந்த விஷயங்களைப் புதுப்பிப்பதற்கு எவ்வளவு கட்டணம் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.


1. 5 வயது, 15 வயது மற்றும் 17 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபருக்கும் பயோமெட்ரிக் ஆதாரை புதுப்பிக்க ரூ.100 கட்டணம்.


2. மக்கள்தொகை தரவுகளுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


3. மக்கள்தொகை தரவு இல்லாமல் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.100 வசூலிக்கப்படும். 


4. மக்கள்தொகை தரவுகளை ஆன்லைனில் புதுப்பிக்க ரூ.50 கட்டணம்.


5. ஆதார் பதிவிறக்கம் மற்றும் வண்ண அச்சுக்கு ரூ.30 கட்டணம்


6. அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை புதுப்பிக்க ரூ.25


7. PIN அடிப்படையிலான முகவரியைப் புதுப்பிக்க ரூ.50 வசூலிக்கப்படும்.


மேலும் படிக்க | முதலீடு செய்ய சூப்பர் ஆஃப்ஷன்! டாப் 5 இன்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ