விரைவில் வரும் வந்தே பாரத் மெட்ரோ ரயில்...அப்படி என்ன சிறப்பம்சங்கள்?
ஒரு மாநிலத்தின் அடுத்த இடங்களுக்கு பயணிப்பதை எளிதாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வந்தே மெட்ரோ ரயில்கள் சேவையை அறிமுகப்படுத்தினார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மினி வெர்ஷனான வந்தே மெட்ரோ சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. வந்தே பாரத் மெட்ரோவின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு இந்த ஆண்டு நிறைவடையும். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடம் மற்றும் சொந்த ஊர்களுக்கு இடையே வசதியாக பயணம் செய்ய உதவும் வகையில் வந்தே மெட்ரோ சேவைகள் தொடங்கப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ஒரு மாநிலத்தின் அடுத்த இடங்களுக்கு பயணிப்பதை எளிதாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வந்தே மெட்ரோ ரயில்கள் சேவையை அறிமுகப்படுத்தினார் என்று கூறினார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: HRA விதிகளில் மாற்றம்! இனி இவர்களுக்கு அலவன்ஸ்கள் கிடையாது!
மேலும் கூறுகையில், வந்தே மெட்ரோவை நாங்கள் மேம்படுத்துகிறோம், பெரிய நகரங்களைச் சுற்றி, மக்கள் வேலை அல்லது ஓய்வுக்காக வந்து ஏதேனும் இடங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மக்களின் பயணத்தை வசதியாக்கி தரும் வகையில் வந்தே பாரத்துக்கு சமமான வந்தே மெட்ரோவைக் கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு ரயிலின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறைவடைந்து அடுத்த ஆண்டில் ரயில் செயல்பாட்டுக்கு வரும் என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
வந்தே மெட்ரோ பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை:
1) செமி-ஹை ஸ்பீட் வந்தே பாரத் ரயில்களின் ஸ்லீப்பர் வெர்ஷன் ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது.
2) இந்த ரயில்கள் மெட்ரோ ரயில்கள் போல எட்டு பெட்டிகளை கொண்டிருக்கும்.
3) வந்தே பாரத் மெட்ரோவானது பயணிகளுக்கு விண்கலத்தில் செல்வது போன்ற உணர்வை கொடுக்கும்.
4) மக்கள் சொந்த ஊர்களில் இருந்து பெரிய நகரங்களில் உள்ள அலுவலகங்களுக்கு வசதியாக பயணிக்க உதவும் வகையில் வந்தே மெட்ரோ உருவாக்கப்பட்டு வருகிறது.
5) எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை விரைவில் கொண்டு வருமாறு இன்டக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) மற்றும் லக்னோவைச் சேர்ந்த ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (ஆர்டிஎஸ்ஓ) ஆகியவற்றின் பொது மேலாளர்களுக்கு (ஜிஎம்கள்) ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களை குறுகிய கார் அமைப்புடன் இயக்கும் முடிவு பயணிகளுக்கு குறிப்பாக வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு பெரிய நகரங்களுக்குச் செல்ல விரும்பும் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஒரு வரமாக இருக்கும். சாதாரண வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகளைக் கொண்டவை. வந்தே பாரத் ரயில்கள் லத்தூர் (மகாராஷ்டிரா), சோனிபட் (ஹரியானா) மற்றும் ரேபரேலி (உத்தர பிரதேசம்) ஆகிய இடங்களில் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ