செப்டம்பர் 5 வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மக்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்!!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வந்தே பாரத் மிஷனின் கீழ் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் உட்பட பல்வேறு முறைகள் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சனிக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்தார்.


இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளதாவது.... "சர்வதேச விமானங்கள் 2020 மே 6 முதல் வந்தே பாரத் மிஷனின் கீழ் சிக்கித் தவிக்கும் குடிமக்களை திருப்பி அனுப்புவதற்கும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தொடர்ந்து உதவுகின்றன. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் உட்பட பல்வேறு முறைகள் மூலம் திரும்பி வந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார். 


ALSO READ | அரசு வேலைக்கான பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை: நிதி அமைச்சகம்



மேலும், செப்டம்பர் 5 ஆம் தேதி 4,059 இந்திய பிரஜைகள் தாயகம் திரும்பி வந்ததாகவும் விமான அமைச்சர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக வந்தே பாரத் மிஷன் மே மாத தொடக்கத்தில் தொடங்கியது.