புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மது விலை அதிகரிக்கிறது. எனவே மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பார்கள் மற்றும் கஃபேக்களில் மது அருந்துபவர்களுக்கு இனி சுமை அதிகரிக்கும். ஏனென்றால், அவர்கள் மேலும் அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். நவம்பர் 1 முதல், அனுமதி பெறப்பட்ட பார்கள் மற்றும் கஃபேக்களில் மதுபான சேவைகளுக்கான வாட் வரி அதிகரிக்கிறது. மதிப்பு கூட்டப்பட்ட வரியில் (VAT) 5 சதவீத உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது அத்தகைய சேவைகளுக்கான மொத்த VAT விகிதத்தை 10 சதவீதமாக உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், உள்ளூர் ஒயின் கடையில் உங்களுக்குப் பிடித்த பாட்டிலை வாங்குபவர்களுக்கு வாட் வரி உயர்வால் பாதிப்பு இல்லை. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை அண்மையில் வெளியிட்ட செய்தியின்படி, மதுவுக்கான வாட் வரி (VAT) அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் வெள்ளிக்கிழமை (2023, அக்டோபர் 20) வெளியிட்டது.


ஆனால் அரசின் இந்த வாட் வரி அதிகரிப்பு, நட்சத்திர ஹோட்டல்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது, ஏனெனில் அவை ஏற்கனவே மதுபான சேவைகளுக்கு 20 சதவீதம் என்ற அதிக அளவிலான வாட் வரியை செலுத்துகின்றன.


மேலும் படிக்க | தமிழக பெண் குழந்தை உதவித்தொகை ரூ.50,000! விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி நாள்!


தற்போது மகாராஷ்டிர அரசு வாட் வரி அதிகரித்திருப்பது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பார் உரிமக் கட்டணங்கள் ஏற்கனவே தங்களுக்குச் சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாட் வரி அதிகரிப்பு மேலும் நிலைமையை மோசமாக்கும் என்றும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு செலவுகள் அதிகரிக்கின்றன என்றும் சொல்கின்றனர்.


மகாராஷ்டிராவில் மதுபானத்தின் மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) அதிகரிப்பதற்கான சமீபத்திய முடிவு, தொழில்துறையினரிடையே கவலையை எழுப்பியுள்ளது. அரசின் முடிவால், மதுபான விலைகள் உயரும் என்றும், வாடிக்கையாளர்கள் வருவதை குறைத்துக் கொள்வார்கள் என்றும் கூறுகின்றனர்.  


இந்த வாட் வரி உயர்வு, கலால் கட்டணங்களின் வருடாந்திர அதிகரிப்புடன் இணைந்து வணிகத்தில் சரிவை ஏற்படுத்தக்கூடும் என்றுஇந்தியாவின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் (HRAWI) தலைவர் பிரதீப் ஷெட்டி தெரிவித்தார்.


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!


மாநில அரசின் வாட் வரி அதிகரிப்பின் எதிரொலியாக பார்களுக்கு வந்து மது அருந்துவதற்கு பதிலாக, ஒயின்ஷாப்களில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள் என்றும், அவர்கள் பார்களுக்கு பதிலாக, மொட்டை மாடிகள், பூங்காக்கள், கடற்கரை அல்லது வாகனங்களை நிறுத்தி மது அருந்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.


புதிய கலால் கொள்கையை மாநில அரசு ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போதைய வாட் வரி அதிகரிப்பானது பெரிய பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.  


மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ