இந்தியர்களுக்கு விசா தேவையில்லை... மலேசியா, இலங்கை, தாய்லாந்தை அடுத்து வியட்நாம்..!
பொருளாதார சுற்றுலா துறையை நம்பி இருக்கும் சில நாடுகளும் உள்ளன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் சுற்றுலாத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, உள்ளூர் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. சுற்றுலா துறையே நம்பி இருக்கும் சில நாடுகளும் உள்ளன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
அந்த வகையில், சமீபத்தில் இலங்கை, மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்திய பயணிகளை ஈர்க்கும் நோக்கில், தங்கள் நாட்டுக்கு வருகை தர விசா தேவை இல்லை என்று அறிவித்தன. இலங்கை அரசு, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் பயணிகளுக்கு வரும் ஐந்து மாத காலங்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 2024, மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும். இலங்கை சுற்றுலாத்துறையை அதிகம் நம்பி இருக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா துறையை அதிகம் நம்பி இருக்கும் மற்றொரு நாடான தாய்லாந்தும், இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது. மேலும், தாய்லாந்து செல்லும் இந்தியர்கள், விசா (Visa) இல்லாமல் 30 நாட்கள் தங்கி இருக்கலாம் என்றும் விதிகளை தளர்த்தி உள்ளது. இந்த தளர்வு, 2024 மே பத்தாம் தேதி வரை அமலில் இருக்கும்.
மலேசியா நாடும், தங்கள் நாட்டுக்கு வருகை தர இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அறிவித்தது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மாநாடு ஒன்றில் பேசியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த அறிவிப்பு, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொருந்தாது. மலேசிய நாட்டில் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள், 30 நாட்கள் தங்குவதற்கு விசா அனுமதி தேவையில்லை.
மேலும் படிக்க | இன்று முதல் இந்த 5 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை!
தற்போது, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்தை போலவே வியட்னாமும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய நாடுகளில் மிகவும் அழகான நாடு என்று கருதப்படும் வியட்நாம், கடற்கரைகள் ஆறுகள் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடமாகும். வியட்நாம் சுமார் 25க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு வியட்நாம் வர விசா தேவையில்லை என்று விரைவில் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, ஜெர்மனி, பிரான்ஸ் , ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வியட்நாம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களும் விசா இல்லாமல் விரைவில் வியட்நாம் செல்லலாம்.
விசா தளர்வு குறித்து தகவல் அளித்த வியட்நாம் சுற்றுலாத்துறை அமைச்சர், குயன் வாங் ஹங், நாட்டின் சுற்றுலாத் துறையை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, இந்தியா போன்ற சில முக்கிய நாடுகளுக்கு குறுகிய கால விசா தள்ளுபடி செய்யப்படுவது குறித்து பேசினார். இந்த வருடம் ஜனவரி முதல் அக்டோபர் வரை, அதாவது 2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வியட்னாமிற்கு சுமார் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளனர். இது சென்ற ஆண்டை விட நான்கு புள்ளி ஆறு மடங்கு அதிகமாகும் என அந்நாட்டின் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - India Vs Canada: இந்தியா கனடா விசா மோதல்களும் முடிவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ