ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) கடந்த ஆண்டு தனது செடான் காரான ஸ்கோடா ரேபிட்டின் Rider Plus வகையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 8.19 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. rushlane அறிக்கையின்படி, நிறுவனம் இப்போது இந்த பிரபலமான வேரியண்ட் ஐ நிறுத்த முடிவு செய்துள்ளது. Rider Plus வேரியண்ட் காரின் அடிப்படை வேரியண்டான ரைடருக்கு மேலே நிலைநிறுத்தப்பட்டது. இந்த ரைடர் பிளஸ் வேரியன்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்கோடா (Skoda) ரேபிட் விரைவில் குஷாக் அடிப்படையிலான புதிய செடான் மாடலால் மாற்றப்பட உள்ளது. ஆனால் இப்போதைக்கு, நிறுவனம் காரின் மாறுபாடுகளை மாற்றியுள்ளது. இந்த வேரியண்ட்டில் தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுக்க நிறுவனம் முயற்சித்தது. இதில் Apple CarPlay, Android Auto மற்றும் SmartLink இணைப்பைக் உள்ளிட்டவை உள்ளது. மேலும் 6.5 அங்குல டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், automatic climate control, டுவல் டோன் இன்டிரியர் தீம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


Also Read | Electric Vehicle: பெட்ரோல் கவலை வேண்டாம், பட்ஜெட்டுக்குள் அசத்தலான ஸ்கூட்டர்கள் இதோ


மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஸ்கோடா ரேபிட் ரைடர் ப்ளஸ் வேரியண்டில் கருப்பு நிற அவுட் கிரில், லிப் ஸ்பாய்லர், பிளாக்-அவுட் பி-பில்லர், டூயல் ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய சீட் பெல்ட்கள் உள்ளன. இந்த மாடல் கேண்டி வைட், கார்பன் ஸ்டீல், பிரில்லியண்ட் சில்வர் மற்றும் டோஃபி பிரவுன் உள்ளிட்ட நான்கு வண்ண விருப்பங்களில் இருந்தது.


இயந்திரத்தைப் பற்றி பேசுகையில், ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் வேரியன்ட் 1.0 லிட்டர் TSI பெட்ரோலுடன் வந்தது. இந்த எஞ்சின் 109bhp பவரையும், 175Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இது 6-ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் 6-ஸ்பீட் மானுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களைப் பெறுகிறது.


Also Read | ரூ. 50 ஆயிரத்துக்கு மாருதி Wagon R காரை வாங்கலாம் -முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR