பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் பணம் சம்பாதிக்க 6 வழிகள்!
உங்களிடம் நிறைய வீடுகள் இருந்தாலோ அல்லது உங்களது இடம் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தாலோ நீங்கள் அதைவைத்து பணம் சம்பாதிக்கலாம்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் வருமானம் குறைந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களது செலவுகளை சமாளிக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஓய்வுபெற்ற பின்னரும் பணம் சம்பாதிக்க சில வழிகள் உள்ளது, அதனை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட அளவு வருமானத்தை பெறலாம். ஓய்வுக்கு பின்னர் எப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று இங்கு காண்போம்.
1) செல்லப்பிராணிகளை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலோ அல்லது அவற்றை முறையாக பராமரிப்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலோ நீங்கள் இதை வைத்தே பணம் சம்பாதிக்கலாம். இ-லர்னிங் பிளாட்பாரம் Preply தரவுகளின்படி, செல்லப்பிராணியான நாய்களை குறிப்பிட்ட மணி நேரமா நடைப்பயிற்சி அழைத்து செல்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளமாக வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது.
2) கற்பித்தல் எப்போதுமே உங்களுக்கு அறிவுத்திறனையும், வருமானத்தையும் கொடுக்கும். இந்த தொற்றுநோய் காலகட்டங்களில் ஆன்லைன் கற்பித்தல் பிரபலமாக இருந்து வருகிறது, ஓய்வுபெற்றவர்கள் ஆன்லைன் மூலமாக கற்பித்து வருமானத்தை பெறலாம். Preply அல்லது Wyzant போன்ற ஆன்லைன் பயிற்சி தளங்களின் மூலம் நீங்கள் கற்பித்தல் செயலை தொடங்கலாம். உங்களிடம் க்ரெடென்ஷியல் இருந்தால், நீங்கள் ஒரு துணைப் பேராசிரியராகக் கற்பிக்கக்கூடிய கல்லூரி அளவிலான படிப்பை உருவாக்கலாம்.
மேலும் படிக்க | Business Idea: வெறும் ரூ.5,000 முதலீட்டில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம்!
3) ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் பல வருடங்களாக தங்கள் பணி ரீதியான பல அனுபவங்களை கொண்டிருப்பார்கள். எனவே ஓய்வுபெற்றவர்கள் அவர்களது துறை ரீதியான ஆலோசனையை பிறருக்கு வழங்கி அதன்மூலம் வருமானத்தை பெறலாம். உங்களது துறை பற்றி உங்களுக்கு இருக்கு அறிவுத்திறனை பகிர்ந்து நல்ல வருமானம் பெறமுடியும்.
4) நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து அல்லது உங்கள் நகரத்தை பொறுத்து அங்கு குவிந்து கிடக்கும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணமாக, உங்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கு சில சமயங்களில் மாற்று ஆசிரியர்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பணியாளரை தேவைப்படும் பட்சத்தில் அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு வருமானத்தை பெறலாம். கிராசிங் காவலர்கள், தடகள அணிகளுக்கான உதவி பயிற்சியாளர்கள் மற்றும் இடைவேளை மேற்பார்வையாளர்கள் போன்ற பணிகளை நீங்கள் செய்யலாம்.
5) உங்களிடம் நிறைய வீடுகள் இருந்தாலோ அல்லது உங்களது இடம் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தாலோ நீங்கள் அதைவைத்து பணம் சம்பாதிக்கலாம். புதிதாக புதுப்பிக்கப்பட்ட அடித்தளம் அல்லது அறைகளை வீணாக்காமல், அதை Airbnb தளத்தில் வாடகைக்கு விடலாம். இதன் மூலம் சுற்றுலா தளங்களுக்கு வரும் பல பார்வையாளர்கள் உங்கள் இடத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்வார்கள், உங்களுக்கும் வருமானம் கிடைக்கும்.
6) உங்களுக்கு நிதி அல்லது கணக்கியல் பின்னணி இருந்தால், புத்தக பராமரிப்பை மேற்கொள்ளலாம். நிதித் திறன்களை ஃப்ரீலான்ஸ் அடிப்படையில் செய்யலாம் அல்லது புக் கீப்பிங் திறன்கள் படிப்பை எடுத்து திட்டப் பணிக்குத் தகுதி பெறலாம். நீங்கள் ஒரு கூடுதல் வேலையைச் செய்ய விரும்பினால் அல்லது உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பினால் போட்டித்தன்மையுள்ள ஒரு பாடத்தை படித்து அதன் மூலம் அறிவுத்திறனை பெருக்கி வருமானம் ஈட்டலாம்.
மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ 50 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ