வியாபாரம் என்பது லாபம் சம்பாதிக்க மட்டுமா? இல்லை என்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். உலகிலேயே மிகவும் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது விருந்தோம்பல் துறையில் முதலீடு செய்யவிருக்கிறது. சுருங்கச் சொன்னால், ஹோட்டல் தொழிலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே தொழில்நுட்பத் துறையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தொழிலை வேறு பல துறைகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.


மைக்ரோசாப்ட் நிறுவனம், ஹோட்டல் துறையில் பிரபல நிறுவனமான ஓயோ (hotel chain Oyo Hotels and Homes) நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சாஃப்ட் பேங்க் ஆதரவு கொண்ட ஓயோ ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸில் மிகப் பெரிய அளவிலான தொகையை  முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.  


Also Read | July 2021: இன்றைய தினத்தின் மீள்காட்சி நினைவுகள் 


ஓயோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரித்தேஷ் அகர்வால் இந்த மாத தொடக்கத்தில் நிறுவனம் IPO முதலீடுகளை பரிசீலிப்பதாக கூறியதை அடுத்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஓயோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. 


ஓயோவில் மைக்ரோசாப்டின் மூலோபாய முதலீட்டை பல தொழில்துறை ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தம் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்றும் ஓயோவின் ஐபிஓவுக்கு இந்த ஒப்பந்தம் முன்னோடியாக இருக்கும் என்றும் ரியாட்டர்ஸ் நிறுவனம் கூறுகிறது.


இதற்கிடையில், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மைக்ரோசாப்ட் ஆரம்பத்தில் ஒரு சிறிய பங்கை வாங்கும் என்று பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், வருங்காலத்தில் முதலீட்டுத்தொகை அதிகரிக்கும் தெரிவும் உண்டு.


Also Read | மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்:கடுமையான விதிகள் அமல்


இருப்பினும், ஓயோ அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இந்த ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் வெளிவரவில்லை. இந்த மாத தொடக்கத்தில் உலக நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ஓயோ 660 மில்லியன் டாலர் in term loan B (TLB) நிதியை திரட்டிய பிறகு மைக்ரோசாப்டின் முதலீடு தொடர்பான இந்த செய்திகள் வெளிவருகின்றன.  


தற்போது,  Softbank Vision Fund, Sequoia Capital, Lightspeed Ventures, Airbnb மற்றும் Hero Enterprise உள்ளிட்ட பல முதலீட்டாளர்கள் ஓயோவில் முதலீடு செய்துள்ளனர்.  


ஓயோவின் டிஜிட்டல் இருப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு பெரிய சந்தைப் பங்கைப் பெறுவதற்கும் அதன் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. ஐபிஓவிலிருந்து திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்தி ஓயோ நிறுவனம் தனது வணிகத்தை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Read Also | மரம் விழுந்து கார் சேதமானால் உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா?  


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR