New PUC Rules: பொதுவாக வாகனங்களின் மாசு சான்றிதழ் குறித்து நாம் பெரிதாக கவலைப்படுவதில்லை, மேலும் வாகனங்களின் மாசு தொடர்பான சோதனை தவறாமல் செய்வதும் இல்லை. மாசு கட்டுபாட்டு சோதனை என்ற பெயரில், கொடுக்கப்படும் சான்றிதழ், ஒரு சடங்கை போன்று கொடுக்கப்படுகிறது. வாகனம் எவ்வளவு புகை வீசினாலும், அதன்ன் சான்றிதழ் உண்மை நிலையை கூறுவதில்லை. ஆனால் இனி அது சாத்தியமில்லை.
PUC நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மாற்றப்படும்
PUC சான்றிதழ்கள் குறித்து அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாசு கட்டுப்பாட்டின் கீழ் (PUC) இப்போது நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியாக மாற்றப்படும். இதனுடன், பியூசியும் தேசியப் பதிவேட்டில் இணைக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக மாசுபாடு கணக்கிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், தற்போது, PUC நாடு முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது, அதே நேரத்தில், வாகன உரிமையாளரின் நலனை கருத்தில் கொண்டு, சில புதிய அம்சங்களும் அதில் சேர்க்கப்படும்,.இது வாகன உரிமையாளர்களுக்கு உதவும்.
ALSO READ| Petrol, Diesel Price: இன்றைய (ஜூலை, 31) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
அரசாங்கத்தின் இந்த புதிய PUC சான்றிதழ் விதிகளில் உள்ள சிறப்பு அம்சங்கள்
1. சாலை போக்குவரத்து அமைச்சகம் PUC , அதாவது மாசு கட்டுபாட்டு சான்றிதழின் புதிய வடிவத்தை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
2. பியூசி படிவத்தில் ஒரு கியூஆர் குறியீடு இருக்கும், அதில் வாகனத்தின் உரிமையாளரின் பெயர் மற்றும் அதன் உமிழ்வின் நிலை, அதாவது எவ்வளவு புகை வெளியேறுகிறது என்பது போன்ற பல வகையான தகவல்கள் இருக்கும்.
3. PUC தரவுத்தளம் தேசிய பதிவேட்டில் இணைக்கப்படும். மாசு சான்றிதழ் தேசிய பதிவேட்டில் உள்ள தகவலுடன் இணைக்கப்படும்.
4. புதிய PUC படிவத்தில், வாகனத்தின் உரிமையாளரின் மொபைல் எண், அவரது முகவரி, வாகன எண் மற்றும் வாகனத்தின் சேஸ் எண் ஆகியவை உள்ளிடப்படும்.
5. PUC சான்றிதழில், வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணை உள்ளிடுவது கட்டாயமாக்கப்படும், அதில் வெரிபிகேஷன் மற்றும் கட்டணங்களுக்கு ஒரு SMS தகவல் அனுப்பப்படும்
6. நிராகரிப்பு சீட்டு (Rejection Slip) முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் மாசு அளவு அதிகபட்ச வரம்பை விட அதிகமாக இருந்தால், அதற்கு நிராகரிப்பு சீட்டு வழங்கப்படும்.
7. இந்த சீட்டுடன் வாகனத்தை சர்வீஸ் செய்ய, நீங்கள் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். தவறான மாசு அளவிடும் இயந்திரம் இருந்தால், உரிமையாளர் மற்றொரு மையத்திற்கு செல்லலாம்.
8. அமலாக்க அதிகாரிக்கு, வாகனம் உமிழ்வு தரநிலைகளின் விதிகளை மீறுவதாக நம்புவதற்கு சரியான காரணம் இருந்தால், அவர் எழுத்துப்பூர்வமாக அல்லது மின்னணு முறையில், ஓட்டுநர் அல்லது வாகனத்தின் பொறுப்பான நபருக்கு, அவரது வாகனத்தை அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையத்தில் தேர்வுக்காக வாகனத்தை டெபாசிட் செய்யுமாறு உத்தரவிடலாம்.
9. வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை ஆய்வுக்காக கொண்டு வராவிட்டால், அவருக்கு அபராதம் விதிக்கப்படும். பதிவு அதிகாரியும் பதிவுச் சான்றிதழை (RC), பர்மிட் ஆகியவற்றை சஸ்பெண்ட் செய்ய முடியும்
10. PUC பெறப்படும் வரை இந்த சஸ்பெண்ட் உத்தரவு அமலில் இருக்கும்.
ALSO READ | RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR