EPF Claim: அலுவலகப் பணிகளில் பணிபுரியும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு இருக்கின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புகளை கண்காணித்து நிர்வகிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து தங்கள் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. பிஎஃப் தொகை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது இபிஎஃப் கணக்கு (PF Account) தொடர்பான அனைத்து வித தகவல்களையும் புதுப்பிப்பித்தல்களையும் வைத்திருப்பது மிக முக்கியமாகும். ஒரு பிஎஃப் உறுப்பினர் ஓய்வு பெற்ற பிறகு தனது பிஎஃப் கணக்கில் இருந்து இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்கிறார். சில சந்தர்ப்பங்களில் இதற்கு முன்னரும் இந்த தொகை உறுப்பினரால் எடுக்கப்படுகின்றது. சில சமயங்களில் இபிஎஃப் அதிகாரிகள் சரியான காரணம் இல்லாமலேயே பிஎஃப் உறுப்பினர்களின் க்ளெய்ம்களை நிராகரிப்பதாக EPFO -வுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) பலவித சிக்கல்களை சந்திக்க வேண்டிய வருகின்றது. 


இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு வருங்கால வைப்பநதி அமைப்பாளன EPFO உத்தரவுகளை வழங்கியுள்ளது. நீங்களும் இபிஎஃப் க்ளெய்மிற்கு (EPF Claim) விண்ணப்பத்திருந்தால் அது நிராகரிக்கப்படும் என்ற அச்சம் வேண்டாம். இதற்கான தீர்வை EPFO வழங்கியுள்ளது.


EPFO வழங்கிய வழிகாட்டுதல்கள் என்ன? (Guidelines Regarding EPF Claim Rejection)


- ஒரே இபிஎஃப்ஓ க்ளெய்ம் பல காரணங்களுக்காக நிராகரிக்கப்படக்கூடாது.


- எந்த க்ளைமையும் தேவையில்லாமல் தாமதிக்கக்கூடாது என்றும் EPFO கூறியுள்ளது.


- கோரிக்கை மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று EPFO  தெரிவித்துள்ளது


- EPFO சந்தாதாரரின் க்ளெய்மை தாக்கம் செய்யும்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதைப்பற்றி அதை தாக்கல் செய்யும் முன்னரே சந்தாதாரரிடம் தெரிவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவரது க்ளெய்மின் செயலாக்கத்தில் நேரம் எடுக்காது.


- இதன் பிறகும் ஒருவரது க்ளைம் ரிஜெக்ட் செய்யப்பட்டால் அனைத்து கோரிக்கைகளும் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும்.


- அந்த நபர் செய்துள்ள தவறுகள் சரி செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் க்ளெய்ம்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.


- இபிஎஃப் சந்தாதாரரின் (EPF Subscriber) கோரிக்கையில் உள்ள அனைத்து குறைபாடுகள் பற்றியும் அவரிடம் உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும்.


- இதன் மூலம் ஒரு பணியாளர் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை எதிர்கொள்வதை தவிர்க்க முடியும்


- அனைத்து க்ளெய்ம்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இபிஎஃப்ஓ தெரிவிக்கின்றது


எந்த ஒரு சரியான காரணத்தையும் கூறாமல் அதிகாரிகள் EPFO உறுப்பினர்களின் க்ளெய்ம்களை நிராகரிப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. இதனால் பிஎஃப் உறுப்பினர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


மேலும் படிக்க | FASTag KYC அப்டேட் செய்யும் எளிய வழிமுறை... முழு விபரம் இதோ..!!


கள அலுவலகங்கள் நிராகரிக்கப்படும் பிஎஃப் க்ளெய்ம்களை மறுபரிசீலனைக்காக மண்டல அலுவலகத்திற்கு அனுப்பும் என்று புதிய வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் சரியான சமயத்திற்குள் உறுப்பினரின் க்ளெய்ம்கள செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிஎஃப் கணக்கில் இருந்து தொகையை எடுப்பது எப்படி?


- EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள உறுப்பினர் போர்ட்டலுக்கு நீங்கள் செல்ல வேண்டும். 


- அதன் பிறகு மெனுவில் Services option -ஐ கிளிக் செய்யவும். 


- இப்போது For Employees என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் திறக்கும்.


- இங்கே Member UAN/Online Service (OCS/OTCP) என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


- அதன் பின்னர், லாக் இன் பக்கம் திறக்கும். உங்கள் UAN மற்றும் பாஸ்வர்டை உள்ளிட்டு போர்ட்டலில் லாக் இன் செய்யவும். இதற்குப் பிறகு ஆன்லைன் சேவைகளைக் கிளிக் செய்யவும். 


- கீழே தோன்றும் மெனுவிலிருந்து Online Services என்பதை க்ளிக் செய்யவும். 


- டிராப்டவுன் மெனுவில் Select CLAIM (FORM-31, 19 & 10C)  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


- இதன் பின்னர், ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைச் சரிபார்க்கவும்.


- கணக்கு சரிபார்ப்புக்குப் பிறகு, உறுதிமொழிச் சான்றிதழ் திறக்கப்படும், அதை அக்செப்ட் செய்ய வேண்டும். 


- இதற்குப் பிறகு நீங்கள் ஒப்பந்தச் சான்றிதழையும் அக்செப்ட் செய்ய வேண்டும். 


- பிறகு, Proceed for Online Claim. என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.


- இங்கெ ஒரு படிவம் திறக்கும். இதில், I want to apply for என்பதன் முன்னால் உள்ள டிராப்டவுனில் PF ADVANCE (FORM – 31) -ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.


- இதற்குப் பிறகு உறுப்பினர் பணத்தை எடுப்பதற்கான காரணத்தையும், எடுக்க விரும்பும் தொகையையும் தெரிவிக்க வேண்டும். 


- இதன் பிறகு, செக்பாக்சை மார்க் செய்தவுடன், செயல்முறை முடிந்து உங்கள் விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படும்.


மேலும் படிக்க | வங்கி ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: வாரத்தில் 5 நாள் வேலை, ஊதிய உயர்வு!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ