சம்பளத்தில் பிடிக்கப்படும் தொகை பிஎஃப் கணக்கில் டெபாசிட் ஆகுதா? இப்படி ஈசியா செக் செய்யலாம்

EPFO Update: இபிஎஃப் சந்தாதார்ரகள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை செக் செய்வது எப்படி? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 23, 2024, 11:19 AM IST
  • எஸ்எம்எஸ் மூலம் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம்.
  • மிஸ்டு கால் மூலம் இருப்பை தெரிந்துகொள்ளலாம்.
  • உமங் செயலி மூலம் பிஎஃப் இருப்பை அறியலாம்.
சம்பளத்தில் பிடிக்கப்படும் தொகை பிஎஃப் கணக்கில் டெபாசிட் ஆகுதா? இப்படி ஈசியா செக் செய்யலாம்

EPFO Update: அலுவலக பணிகளில் உள்ளவர்கள் மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை அவர்களது நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசு நல்ல வட்டியையும் அளிக்கின்றது. தற்போது இபிஎஃப் இருப்புக்கு 8.25 சதவிகித வட்டி வழங்கப்படுகின்றது. சமீபத்தில்தான் அரசாங்கம் பிஎஃப் கணக்குகளுக்கான வட்டியை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Add Zee News as a Preferred Source

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இபிஎஃப் கனக்குகளை நிர்வகிக்கின்றது. பணி ஓய்வு காலம் அல்லது பிற அவசர தேவைகளின் போது பயன்படுத்த இபிஎஃப் தொகை பெரிய வகையில் உதவியாக இருக்கின்றது. இபிஎஃப் கணக்கின் (EPF Account) மூலம் எதிர்காலத்திற்கான ஒரு நல்ல தொகையை பணியாளர்கள் சேர்க்கலாம். நீங்களும் இபிஎஃப் உறுப்பினராக இருந்து பல வருடங்களாக உங்கள் EPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து கொண்டிருந்தால், தற்போது அதில் கணிசமான தொகை சேர்ந்திருக்கும். நமது இபிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இபிஎஃப் சந்தாதார்ரகள் (EPF Subscribers) தங்கள் கணக்கில் உள்ள தொகையை செக் செய்வது எப்படி? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

எஸ்எம்எஸ் மூலம் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம்

- இபிஎஃப் இருப்புத்தொகையை SMS மூலமாக தெரிந்துகொள்ளலாம். 

- இதற்கு பணியாளர் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு 'EPFO UAN' என்று டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். 

- உங்களுக்கு விருப்பமான மொழியில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) தெரிந்துகொள்ள, அந்த மொழியின் முதல் மூன்று எழுத்துகளையும் செய்தியில் டைப் செய்ய வேண்டும்.

- உதாரணமாக தமிழில் செய்தியை பெற 'EPFOHO UAN TAM' என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.

- EPFO ​​இந்த வசதியை ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் வழங்குகிறது.

- இதற்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட இருப்பு தொகை பற்றிய செய்தி மொபைலில் வரும்.

மேலும் படிக்க | SBI vs HDFC vs ICICI வங்கிகள்... FD முதலீடுகளுக்கு வட்டியை அள்ளித் தரும் வங்கி எது

மிஸ்டு கால் மூலம் இருப்பை தெரிந்துகொள்ளலாம்

- பணியாளர்கள் EPFO ​​எண்ணுக்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுத்தும் தங்கள் இபிஎஃப் இருப்பை (EPF Balance) தெரிந்துகொள்ளலாம்.

- இதை செய்ய, யுஏஎன் போர்ட்டலில் (UAN Portal) பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். 

- இந்த வசதியை பெற, உறுப்பினர்களின் வங்கிக் கணக்கு எண், ஆதார் மற்றும் பான் ஆகியவை அவர்களது UAN உடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.

உமங் செயலி மூலம் பிஎஃப் இருப்பை அறியலாம்.

- பிஎஃப் உறுப்பினர்கள் உமங் செயலியின் (UMANG App) மூலமாகவும் EPF இருப்பை செக் செய்யலாம். 

- இதற்கு முதலில் உங்கள் மொபைலில் உமங் செயலியை பதிபிறக்கம் செய்ய வேண்டும்.

- அதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். 

- சர்ச் பாரில் EPFO ​​என டைப் செய்யவும். 

- அதன் பிறகு EPFO ​​பக்கம் திறக்கும்.

- இங்கே கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்தால் ‘Employee Centric Services' பகுதியைக் காண்பீர்கள்.

- இதில், முதலில் இருக்கும் ‘View Passbook’ என்பதை கிளிக் செய்யவும்.

- அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் ‘Visit Service’ என்பதில் கிளிக் செய்யவும்.

- இங்கே உங்கள் UAN ஐ உள்ளிட்டு ‘GET OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

- அதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிட வேண்டும். 

- அதன் பிறகு உங்கள் இபிஎஃப்ஓ பாஸ்புக் தோன்றும். இதில், இருப்புத்தொகையின் அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | ‘இந்த’ தொழிலில் பல லட்சம் லாபம் கிடைக்குமா? அட உண்மை தாங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News