FASTag KYC அப்டேட் செய்யும் எளிய வழிமுறை... முழு விபரம் இதோ..!!

NHAI extends deadline for FASTag KYC Update: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Fastag KYC-ஐ புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை ஒரு மாதம் நீட்டித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 2, 2024, 08:30 PM IST
FASTag KYC அப்டேட் செய்யும் எளிய வழிமுறை... முழு விபரம் இதோ..!! title=

NHAI extends deadline for FASTag KYC Update: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Fastag KYC-ஐ புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை ஒரு மாதம் நீட்டித்துள்ளது. இதன் மூலம் ஃபாஸ்டாக் KYC விபரங்களை மார்ச் 31 வரை புதுப்பிக்கலாம். முன்னதாக இதற்கான காலக்கெடு பிப்ரவரி 29 என இருந்த நிலையில், இந்த காலக்கெடு நீட்டிப்பு, FASTag KYC விவரங்களைப் புதுப்பிக்காதவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.  மார்ச் 31ம் தேதி காலகெடுவிற்குள் புதுப்பிக்காவிட்டால்,  அவர்களது FASTag மார்ச் 31க்குப் பிறகு  தடை பட்டியலில் சேர்க்கப்படலாம். மின்னணு கட்டண வசூல் முறையின் செயல்திறனை அதிகரிக்கவும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி இயக்கவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 'ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டாக்' முயற்சியை செயல்படுத்தியுள்ளது. 

பல வாகனங்களுக்கு ஒரே Fastagஐப் பயன்படுத்துவதையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல Fastagகளை இணைப்பதையோ தடுக்கவே ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டாக் திட்ட கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டாக் மட்டுமே செயலில் இருக்கும். இந்த ஃபாஸ்டாக்கை வேறு எந்த வாகனத்திற்கும் பயன்படுத்த முடியாது.. KYC விவரங்களை புதுப்பிக்க, வாகன உரிமையாளர் வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வழங்க வேண்டும்.

FASTag என்பது ஒரு மின்னணு கட்டண வசூல் அமைப்பாகும், இது அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கவரி செலுத்தும் செயல்முறையை எளிதாக்குகிறது. இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே கட்டணத் தொகையைக் கழிக்க இது உதவுகிறது. மத்திய அரசு தற்போது அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கியுள்ளது. ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்கள், இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. 

Fastag கேஒய்சி ஸ்டேட்டஸை சர்பார்க்கும் முறை

1. முதலில், fastag.ihmcl.com என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

2. முகப்புப் பக்கத்தில் உள்ள உள்நுழைவு என்பதற்கான லாக்இன் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

3. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் உள்நுழையவும், இதன் மூலம் உங்களுக்கு OTP கிடைக்கும்.

4. முகப்புப் பக்கத்தில் உள்ள ‘My Profile’ பகுதியைக் கிளிக் செய்யவும். அதில் ‘KYC Status’ என்பதைக் கிளிக் செய்யவும். இங்கே நீங்கள் உங்கள் கேஒய்சி நிலை புதுபிக்கப்பட்டுள்ளதா என்ற விபரத்தைக் காண்பீர்கள்.

மேலும் படிக்க | மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை? நாடாளுமன்றத்தில் களமிறக்கத் தயாராகும் பாஜக மாநில தலைவர்

KYC விபரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை

நீங்கள் https://fastag. ihmcl.com/ க்குச் சென்று, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் OTP உதவியுடன் உள்நுழையவும். அதன் பிறகு, டாஷ்போர்டு மெனுவில் My Profile ஆப்ஷன் தோன்றும்,  அதில் மை பிரொஃபைல் ஆப்ஷனில் உள்ள KYC துணைப் பிரிவுக்குச் செல்லவும், அதில் அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் புகைப்படம் உள்ளிட்ட தேவையான தகவல்களை பதிவேற்றவும். இதற்குப் பிறகு சமர்ப்பிக்கவும். இதன் பிறகு உங்கள் KYC விபரங்கள் புதுப்பிக்கப்படும்

ஆஃப்லைனில் KYC விபரங்களை புதுப்பிக்கும் முறை

முதலில் உங்கள் FASTag எந்த வங்கியில் பெற்றுக் கொண்டீர்களோ, அந்த வங்கியின் கிளைக்குச் செல்லவும். வங்கி உங்களுக்கு KYC படிவத்தை கொடுப்பார்கள். அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதை தவிர, நீங்கள் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, வங்கி KYC விவரங்களைச் சரிபார்த்து, உங்கள் FASTag தகவல்களை வங்கி புதுப்பிக்கும்.

FASTag வாடிக்கையாளர் சேவை எண் மூலம், FASTag KYC தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறலாம். எனவே சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, 1800 3006 9090 / 1860 266 6888 ஆகிய இலவச எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க |  Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு, லட்சக்கணக்கில் லாபம், மாதா மாதம் சூப்பர் வருமானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News