Fixed Deposit Monthly Income Plan: நிலையான வைப்புத்தொகை இந்தியாவில் மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டமாக உள்ளது. பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கு வங்கிகளின் நிலையான வைப்புத் திட்டங்கள் (Bank Fixed Deposit) சிறந்ததாகக் கருதப்படுகின்றன. வங்கிகளில் FD திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், திட்ட முதிர்ச்சியின் போது, நிலையான வட்டி விகிதத்தில் பணத்தைப் பெறுவீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் ஃபிக்ஸட் டெபாசிட் மூலமும் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வேலையைச் செய்து ஒவ்வொரு மாதமும் பணத்தை ஈட்டுவது போல, வங்கியின் இந்த FD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம். அதன் பெயர் நிலையான வைப்பு மாதாந்திர வருமானத் திட்டம்.


Fixed Deposit Monthly Income Plan: இந்த மாத வருமானத் திட்டத்தின் விவரங்கள் என்ன?


இந்த எஃப்டி திட்டத்தில் (FD Scheme) 2 விருப்பங்கள் உள்ளன.


-  முதல் விருப்பம் ஒட்டுமொத்த FD (Cumulative FD) ஆகும். முதிர்ச்சியின் போது அசல் மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்து தொகை பெறப்படும். 


- மற்றொரு விருப்பம், நான்-குமுலேட்டிவ் FD (Non-Cumulative FD). இந்த திட்டத்தில், ஒரு நிலையான இடைவெளியில் தொடர்ந்து ஒரு வழக்கமான தொகை பெறப்படுகின்றது. விண்ணப்பிக்கும் போது, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர பேஅவுட் இவற்றில் எது வேண்டுமோ அதை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மாதாந்திர விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒவ்வொரு மாதமும் கணக்கிற்குத் தொகை வந்துகொண்டே இருக்கும்.


மேலும் படிக்க | MCLR Rates: வட்டி விகிதங்களை அதிகரித்த வங்கிகள்! உங்கள் ஹோம் லோன் வட்டியும் உயர்ந்துவிட்டதா?


FD மாத வருமானத் திட்டத்தின் அம்சங்கள் (Features of FD Monthly Income Plan)


- இந்தத் திட்டத்தைத் தொடங்க செயலாக்கக் கட்டணம் எதுவும் இல்லை.


- FD மாதாந்திர வருமானத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ 1000 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.


- சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், முதலீட்டாளர்கள் நிலையான வட்டியின்படி மாதாந்திர வருமானத்தைப் பெறுகிறார்கள். அதாவது இது முற்றிலும் பாதுகாப்பான ஒரு திட்டமாக இருக்கும்.


- நிலையான வைப்பு மாதாந்திர வருமானத் திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புத்தொகைக்கு எதிராக கடன் பெறலாம்.


- தனது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, முதலீட்டாளர் எந்த நேரத்திலும் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறிகளை பின்பற்றி தனது பணத்தை எடுக்கலாம்.


Fixed Deposit Monthly Income: இந்த வகை மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்


நிலையான வைப்புத்தொகை மாதாந்திர வருமானம் என்பது மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அவர்கள் தங்கள் வைப்புத்தொகை, அதாவது டெபாசிட் தொகையை பாதுகாப்பாக சேமிக்கும் அதே வேளையில் மாதாந்திர வருமானத்தையும் ஈட்டலாம். அவர்கள் தங்கள் சேமிப்பை க்யுமுலேட்டிவ் எஃப்டியில் முதலீடு செய்தால், அவர்களுக்குத் தொடர்ந்து பணம் கிடைக்காது, முதிர்ச்சியில் மட்டுமே பணம் கிடைக்கும். அதே நேரத்தில், நான்-க்யுமுலேட்டிவ் FD இல், அவர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும், அவர்கள் வருமானத்தையும் பெறுவார்கள், மேலும் அவர்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி வடிவிலும் தொகையை பெறுவார்கள். 


வரி விதிகள் (Tax rules)


நீங்கள் ஒரு வரி சேமிப்பு நிலையான வைப்பு கணக்கில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) 80C பிரிவின் (Section 80C) கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1,50,000 வரையிலான தொகைக்கு வரி விலக்கு (Tax Exemption) பெறலாம். ஒரு நிதியாண்டில் மாத வருமானம் அல்லது லாபம் ரூ. 40,000க்கு மேல் இருந்தால், வங்கி 10% டிடிஎஸ் (TDS) கழிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு இந்த தொகை ரூ.50,000 ஆக உள்ளது.


மேலும் படிக்க | Udyogini: பெண்களுக்கான சிறப்பு திட்டம்! வட்டியில்லாத கடனை பெற முடியும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ