NPS Vatsalya Scheme: சில நாட்களுக்கு முன்னர் என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதன் கீழ் பெற்றொர் தங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம். வழக்கமான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (National Pension Scheme) விரிவாக்கமாக இது உள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 18 வயதாகும்போது, ​​பெற்றோர்கள் திட்டத்திலிருந்து விலகலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPS வாத்சல்யா திட்டத்தின் விதிகள் என்ன?


- இந்த திட்டத்தில், முதிர்வு காலத்தில், மொத்தத் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவீதத்தை வருடாந்திரத் திட்டத்தில் (Anuity Plan) மீண்டும் முதலீடு செய்ய வேண்டும்.
- 20 சதவீதத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும். 
- என்.பி.எஸ் வாத்சல்யா திட்டத்தின் பலன் குழந்தையின் உயர்கல்வி, தொழில் தொடங்குதல் அல்லது பிற முக்கிய தேவைகளின் போது கிடைக்கும்.
- இதில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ 1000 முதலீடு செய்ய வேண்டும்.


NPS Vatsalya: இந்தக் கணக்கை யார் திறக்கலாம்?


என்பிஎஸ் வாத்சல்யா கணக்கை 18 வயது வரை உள்ள யார் பெயரில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த நபர் மட்டுமே இந்தக் கணக்கின் பயனாளியாக இருப்பார். இருப்பினும், இந்தக் கணக்கு சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் பராமரிக்கப்படும்.


என்பிஎஸ் வாத்சல்யா: இந்த கணக்கை எங்கே திறப்பது?


இந்த கணக்கை பெரிய வங்கிகள், இந்தியா போஸ்ட் மற்றும் ஓய்வூதிய நிதிகளுடன் திறக்கலாம். இருப்பினும், இந்தக் கணக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். ஆன்லைனில் கணக்கைத் திறக்க விரும்புவோர் NPS அறக்கட்டளையின் eNPS தளத்திற்குச் சென்று இந்தக் கணக்கைத் திறக்கலாம்.


NPS Vatsalya: இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?


இந்த கணக்கை திறக்க தேவைப்படும் மிக முக்கியமான ஆவணம் குழந்தையின் பிறந்த தேதிக்கான சான்று. இதற்கு நீங்கள் பிறப்புச் சான்றிதழ், பள்ளியை விட்டு வெளியேறும் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ், பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். இது தவிர, பெற்றோர் / பாதுகாவலருக்கு அவர்களது KYC க்கு ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களும் தேவைப்படும்.


என்பிஎஸ் வாத்சல்யா கணக்கை இப்போது இந்த 7 வங்கிகளில் திறக்கலாம்


என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறக்க விரும்புபவர்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளுக்குச் சென்று கணக்கைத் திறக்கலாம். ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா ஆகிய வங்கிகளில் இந்த கணக்கை திறக்க முடியும்.


மேலும் படிக்க | அட்டகாசமான அப்டேட்: PF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம்


NPS வாத்சல்யாவின் கணக்கீடு


பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக என்.பி.எஸ் வாத்சல்யாவில் சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்தாலும், குழந்தைக்கு 18 வயதாகும் போது ஒரு பெரிய கார்பஸை உருவாக்கலாம். ஒரு உதாரணத்தின் மூலம் இந்த கணக்கீட்டை புரிந்து கொள்ளலாம். 


ஒருவர் இந்த திட்டத்தில் தனது குழந்தைக்காக ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். முதலீடு குழந்தைக்கு 18 வயதாகும் வரை நீடிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 சதவிகிதம் ரிடர்ண் கிடைக்கும் என்றும் வைத்துக்கொள்வோம். இந்த வழியில், அவர் கணக்கில் 18 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 2.16 லட்சத்தை முதலீடு செய்வார். அதற்கான வட்டித்தொகையாக சுமார் ரூ.3,89,568 கிடைக்கும். இந்த வழியில் குழந்தைக்காக அவர் உருவாக்கிய மொத்த கார்ப்பஸ் ரூ.6,05,568 ஆக இருக்கும்.


19வது வயதிலிருந்து 60 வயது வரை எந்த சிறாரின் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டதோ, அவர் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம், 60 ஆண்டுகளில் என்பிஎஸ் வாத்சல்யாவில் மொத்தம் ரூ.7.20 லட்சம் முதலீடு செய்யப்படும். இதற்கு வட்டியாக மட்டும் 3.76 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த வழியில் மொத்த கார்பஸ் ரூ.3.83 கோடியாக இருக்கும்.


எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?


60 வயதிற்குப் பிறகு, கணக்கு தொடங்கிய நபரின் பிள்ளை என்.பி.எஸ் வாத்சல்யா கணக்கில் உள்ள அனைத்துப் பணத்தையும் வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்து ஓய்வூதியம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் திட்டத்தில் வட்டி விகிதம் 5-6 சதவீதம் மட்டுமே இருந்தாலும் கூட, அவருக்கு ஆண்டுக்கு வட்டியில் மட்டுமே ரூ.19.15 முதல் ரூ.22.98 லட்சம் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.1.59 முதல் ரூ.1.91 லட்சம் ஓய்வூதியமாகக் கிடைக்கும்.


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்... அதிரடி டிஏ ஹைக்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ