மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்... அதிரடி டிஏ ஹைக்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு?

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த முறை அரசு அகவிலைப்படியை 3-4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 24, 2024, 11:20 AM IST
  • நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்.
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.
  • மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்... அதிரடி டிஏ ஹைக்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு? title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் மத்தியப் பணிகளில் உள்ளார்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாளை அந்த நல்ல செய்தி கிடைக்கலாம் என கூறப்படுகின்றது. 

மத்திய அமைச்சரவை கூட்டம்

நாளை, அதாவது செப்டம்பர் 25-ம் தேதி அல்லது அக்டோபர் 2 ஆம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் ஏற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது. எப்படியும் நவராத்திருக்கு முன் ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த முறை அரசு அகவிலைப்படியை 3-4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. டிஏ 3% அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 53% ஆக அதிகரிக்கும். இது 4% உயர்ந்தால், டிஏ மற்றும் டிஆர் 54% ஆக உயரும். எப்படியும் இந்த முறை ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு (Salary Hike) காத்திருக்கின்றது.

மேலும் படிக்க | 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு? மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்

ஆண்டுக்கு 2 முறை அதிகரிக்கும் அகவிலைப்படி

7வது ஊதியக் குழுவின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிகப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் டிஏ உயர்வு தீர்மானிக்கப்படுகின்றது. ஜூன் ஏஐசிபிஐ குறியீட்டில் 1.5 புள்ளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 3-4% இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் டிஏ உயர்வுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏனெனில் இது கீழ்மட்ட ஊழியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் வரை அனைத்து ஊழியர்களுக்கும் பயனளிக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? 

Salary Hike Calculation: சம்பள உயர்வு கணக்கீடு 

அகவிலைப்படி 3% அதிகரித்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? ஒர் உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 
- ஒரு ஊழியர் மாத சம்பளமாக ரூ. 50,000 பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். 
- அதிகரிப்புக்கு பின்னர் அவரது மாத சம்பளத்தில் தோராயமாக சுமார் ரூ.1,500 அதிகரிப்பு இருக்கும். 
- அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.18,000 அதிகரிப்பு இருக்கும்.

தற்போது ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி கிடைக்கின்றது?

முன்னதாக, ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50% ஆக அதிகரித்தது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வந்தது. 

மேலும் படிக்க | உங்கள் குழந்தை 21 வயதில் கோடீஸ்வரராக வேண்டுமா? இதோ அதற்கான SIP மந்திரம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News